Archive for February, 2010
Saturday, February 27th, 2010
பிறக்கும் முன்
தாயின் கருவறையில்
கிடைத்த நிம்மதி!
பிறந்த பின்
எங்கும் கிடைக்கவில்லை..
மீண்டும் கிடைத்தது
கல்லறையில்..!
- Posted in தமிழ்
- No Comments »
Saturday, February 27th, 2010
தானத்தில்
சிறந்த தானம்..
இரத்த தானம், கண் தானம்..
இன்னும் சொல்லிக்கொண்டே போனாலும்..
தலை சிறந்தது
நிதானம் தான்!!!
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, February 25th, 2010
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி
- Posted in தமிழ்
- No Comments »
Monday, February 22nd, 2010
புறப்படுகிறது ஒரு ரயில்
சென்னையில் இருந்து டெல்லிக்கு .
போய் சேர இரண்டு மூன்று நாள் கூட ஆகலாம்.
இந்த மொட்டை மாடி
பட்டாசு சத்தம்
அவர்களுக்கு
ஜன்னல் கம்பிஇநூடே தெரியும்
சாலையோரப்பூக்கள்
இன்று நாம் கொண்டாடுவது
தீபாவளியை அல்ல
அவர்களுடைய கனவை .
தீபாவளிக்காக அல்லாவிட்டாலும்
அவர்களுடைய வரவுக்காகவாவது
பட்டாசு வெடிப்போம் !!
- Posted in தமிழ், கவிதைகள்
- No Comments »
Monday, February 22nd, 2010
மண்ணாசையும் இல்லை
பொன்னாசையும் இல்லை
பெண்ணாசையும் இல்லை
பதவிக்கும் ஆசையில்லை
உதவிக்கும் ஆசையில்லை
பிச்சைக்கும் ஆசையில்லை
இச்சைக்கும் ஆசையில்லை
வாழவும் ஆசையில்லை
சாகவும் ஆசையில்லை
- Posted in தமிழ்
- No Comments »
Sunday, February 21st, 2010
காய்த்து கனிந்த
மரமும்
காய்ந்து கருகிய
மரமும்
காய்கிறது வெய்யிலில்
- Posted in தமிழ், கவிதைகள்
- No Comments »
Sunday, February 21st, 2010
பசித்த கழுதை
புசித்திருந்தாலும்
பரிதவித்திருக்க மாட்டேன்
விதை நெல்லாய் மண்ணில்
புதைந்திருந்தாலும்
மனம் வெதும்பி இருக்கமாட்டேன்
நீர்க்குமிழி நிமிடத்தில் நெருப்பில்
இட்டிருந்தாலும்
நெஞ்சு வெடித்திருக்கமாட்டேன்
சக்கரங்களினூடே வந்துவந்து போகும்
திரவத்தையே பிரதிபலிக்கிறது
சாலையோரத்தில் கிடக்கும்
கிழிந்த தாவணியொன்று!
– முத்துக்கருப்பசாமி
- Posted in தமிழ்
- No Comments »
Friday, February 19th, 2010
Kadhal thoolviyei kagithathil pathithu
Nan Kannir Vida Virumba Villai……….
En Kaladi Thadathai Intha Ulagathil pathithu
Aval Kannin Vida Virumbukiren………
- Posted in தமிழ்
- No Comments »
Friday, February 12th, 2010
நீ முதன்முதலாய் எனை பார்த்த நாள்..
நீ பார்த்து புன்னகை செய்த நாள்..
உன்னோடு கைக்குலுக்கிய நாள்..
பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..
செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..
நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..
எனக்கு பிடித்த நிறத்தில் நீ உடையணிந்த நாள்..
மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..
உன் தோட்ட ரோஜாவை எனக்கு பரிசளித்த நாள்..
நான் கண்ணடிக்க நீ வெக்கப்பட்ட நாள்..
அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை […]
- Posted in தமிழ்
- No Comments »