Archive for October, 2008

Monday, October 13th, 2008

கூக்குரல்

வந்தவர் கோடி
வாழ்ந்தவர் சிலபேர்…
உலக உயிர்களின்
ஜீவமரணப் போராட்டத்தின் கூக்குரல்,
நீ மிதித்திடும் ஒவ்வொரு மண்ணிலும்
புதையுண்டு கிடக்கிறது.
ஏ மானிடா,
விழித்திடு, தெளிந்திடு,
நீ சாகும்முன் சாதித்திடு…

Sunday, October 12th, 2008

நட்பாகிய காதல்..

அழுகின்ற போதெல்லாம் ஆறுதலா இருந்தீங்க
அப்பபோ என் சிரிப்புக்கு காரணமும் நீங்க…
காதல் என்று சொன்னால்…அய்யயோ…தப்பு!
இன்னும் ஒரு ஜென்மம் வெனும் உன்னோடே நட்பு!
~முருகன்~

Thursday, October 9th, 2008

ஆளவந்தான்

பெண்ண நம்பி பிறந்த போதே, தொப்புல் கொடிகள் அருபடுமே
மண்ணை நம்பும் மாமரம் ஒரு நாள் மாபெரும்புயலில் வேரருமே
உன்னை நம்பும் ஒரு புகழ் கூட ஒருபொழ்துன்னை கைவிடுமே
இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகப்பிணணாள் வரையில் பின்வருமா???

Monday, October 6th, 2008

உண்மையா!!

நான் ரசித்தது நிலவா

அல்லது காலைக் கனவா !!
-அருண்குமார்.ச

Saturday, October 4th, 2008

நட்பின் நீளம்

நம் நட்பின் நீளத்தை
அளக்க முடியவில்லை…
அதுவும் நல்லதுதான்!
ஒருவேளை அளக்க முடிந்திருந்தால்
சீனப் பெருஞ்சுவர் சிறியதாகி
இருக்குமே!!!
ஆம் உலகின் ஆழமானது மட்டுமல்ல
மிக மிக நீளமானதும்
நம் நட்புதான்…
        -ம.செல்வராணி