Archive for September, 2008

Tuesday, September 30th, 2008

தேனை உறிஞ்சிய வண்டு

மலர்களில் இருந்து தேனை
உறிஞ்சி செல்லும் வண்டு போல்
நீயும் உறிஞ்சி செல்கிறாய்-என்
நட்பாகிய தேனை..
நம் நட்பின் சுவை ஆயுளுக்கும்
உன் மனதை குளிர்விக்க
என்றும் உன்னுடன் கழித்த இனிய
நினைவுகளுடன் நான்…
-ம.செல்வராணி

Thursday, September 25th, 2008

நட்பு

நட்பு என்பது தேன்கூடு!
களையாதிருக்கும் வரை..
நட்பு என்பது கண்ணாடி!
உடையாதிருக்கும் வரை..
நட்பு என்பது பூந்தோட்டம்!
வாடாதிருக்கும் வரை..
நட்பு என்பது காற்றாடி!
சுழன்று கொண்டிருக்கும் வரை..
நட்பு என்பது உயிர்நாடி!
நான் உயிரோடிருக்கும் வரை..
-ம.செல்வராணி
cool.selvarani@rediffmail.com

Wednesday, September 24th, 2008

சிந்தனை சிறகு…

சிக்கல்களில் இருந்து சீறிப்பறக்க
சிந்தனை என்ற சிறகு விரித்தேன்
உற்சாகத்தில் உந்திப் பறந்தேன்
தோல்வி என்ற கானலைக் கடந்து
நாணம் என்ற நாணலை வளைத்து
நம்பிக்கை என்ற நதியில் மூழ்கி..
வெற்றி என்ற விண்ணை மட்டும்
விரக்தி இன்றி விரட்டிப் பிடிப்பேன்!
- ம.செல்வராணி

Monday, September 22nd, 2008

சுதந்திரம்…

சிற்பிக்குள் இருக்க விரும்பாத எந்த நீர் துளியும் முத்தாக முடியாது…

Sunday, September 21st, 2008

அன்றும் இன்றும்

அன்று,
     பக்கத்து வீட்டு
     பையனீடம் என்னடீ
     பல்லை காட்டறா?
     பாகீறவர்கள் தப்பா
     நினைக்கமாட்டார்கள்
     அதட்டீனார்  அப்பா!
இன்று,
     பல்லை காட்டி
     பையனீடம் சிரிக்க சொல்
     பார்க்க வரவங்கள்
     தப்பா நினைக்கபோறாங்க?
     ஆர்பாட்டம் செய்தார் அப்பா! 

Sunday, September 21st, 2008

காதல்

கூடவே இருதவள்
கூபீடும் தூரம் சென்றாலே
கூப்புற படுத்து அழுவுரேன்
இதுதான் காதலா?

Friday, September 19th, 2008

மாயம் செய்கிறாய்!!!

நீ உச்சரிக்கும் போது  மட்டும்
அழகாய் தோன்றும் என் பெயர்
நீ அழைக்கும் போது மட்டும்
செல்லமாய் சிணுங்கும் என் தொலைபேசி
நீ நெருங்கும் போது மட்டும்
அலைபாயும் என் விழிகள்
நீ அருகில் இருக்கும் போது மட்டும்
பேச மறுக்கும் என் இதழ்கள்
நீ தொலைவில் இருக்கும் போது மட்டும்
கவிதையாகும் என் எழுத்துக்கள்
என்ன மாயம் செய்தாய் எனக்குள்
சொல்லி விடு என்னிடம் மட்டும் !!!
 

Thursday, September 18th, 2008

வெறுப்பு

வெறுப்பு
 

 
பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
நோயால் அல்ல.
பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
காதலால் அல்ல.
பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
துக்கத்தால் அல்ல.
பசியை நாங்கள் முழுமையாக வெறுக்கிறோம்,
காரணம் வேண்டுமா?
என் சமுதாயமே…
நாங்களே ஏழைகள்….
ஒருவேளை  சோற்றுக்கு
காலை முதல் மாலைவரை வேலை….
மூன்றுவேளை சோற்றுக்கு..
நாங்கள் பசியை  அறியவில்லை..
நாங்கள் அறியவில்லையென்றால்
பசி எங்களை  அரித்துவிடுகிறது..
பசியை நாங்கள் வெறுக்கிறோம்,
முழுமையாக…
எங்கள் மரணநாள் வரையிலும்….
by
subha
subhacathereen@gmail.com
http://subhacharu.blogspot.com/

Sunday, September 14th, 2008

Tholkappiyam

தொல்காப்பியம் மாணவர் உரை.

Thursday, September 11th, 2008

sitharalgal