Archive for August, 2008
Thursday, August 28th, 2008
கள்ளங்கபடம் இல்லாத உலகமா இது
என்ற தூர் எடுக்கும் கேள்விகள் வெகு காலமாக புறக்கணிக்க
பட்டு வருகின்றன,
என் நலன், என் மக்கள், என் உறவினர் என்ற சுயநல வட்டத்தில்தான்
அனைவரின் ஆயுட்காலமும் சிக்கி செதிலாகின்றன,
அப்படியாவது ஒரு சுயநல வட்டத்தில் என்னை சேர்த்து என்
மரணதண்டனைக்கு மறுப்பு கூற மாட்டீர்களா?
கதறி அழுகின்றது கார் மேகம் சூழ்ந்த மாலையில் இருவர்
இன்புற்று கழித்த தருணங்களின் பதிவான அந்த குற்றமற்ற கரு,
கரு என்ற சொன்ன என்னை கழுவில் கூட ஏற்றலாம்,
அகண்ட இந்த பூமி பிரமாண்டத்தில் அனுமதி மறுக்கப்படும் ஒரு […]
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, August 27th, 2008
முட்களோடு வாழ்வதற்காக ரோஜா வருந்தியது இல்லை மனிதா நீ மட்டும் ஏன் உன்னோட இருக்கும் குறைகளூக்காக வருந்துகிறாய்
- Posted in தமிழ்
- No Comments »
Tuesday, August 26th, 2008
விழியை நனைத்த வெளிச்சம்
மழையில் நனைந்த
ஓவியம்போல்
என்
விழியை நனைத்த
இந்த
இளம் வெளிச்சம்
என்
கண்களுக்குள் வந்து
காலையை
சொன்னபோது,
சுகமான சோம்பலை
களிக்கும் விதமாய்
திரண்ட கைகளை
முறுக்கி உயர்த்தியபோது
என்
கடமைகள் தட்டுபட்டது,
கண்
திறந்தேன்.
உலகம் எனக்காக
காத்துக்கிடக்கிறது…,
உன்னைப் பிரிய
வருந்துகிறேன்.,
என் எல்லா
கற்பனையையும்
வெற்றியாய் செய்யும்
கனவே,
இன்னொரு
இரவில் சந்திப்போம்….
இனியேனும்
வெளிச்சத்தை வெல்லும்
துனிவோடு வா…..
-குளிர்தழல்
- Posted in தமிழ்
- No Comments »
Monday, August 25th, 2008
சின்ன சின்ன சண்டைகாக
நீ என்னை ஆயிரம்
முறைகாயப்படுத்துகிறாய்…
உண்மையை தெரியாமலே,
என்னுள் இருப்பது
நீ என்பதை அறியாமல்…
எப்பொழுது நீ
என்னை புரிந்துக்கொள்வாய்…
எனக்கு எல்லாமே நீதான்யென்று….
by
subha
subhacathereen@gmail.com
- Posted in தமிழ்
- No Comments »
Monday, August 25th, 2008
இப்பொழுது எல்லாம்
காற்றிடம்
செல்ல
சண்டையிடுகிறேன்…
என்னைவிட அது
உன்னை அதிகமாக
சுவாசிக்கிறது….
என்பதால் மட்டுமல்ல…
உன்னை
என்னைவிட
அதிகமாக
தழுவுகிறது என்பதாலும் கூட….
by
Subha
subhacathereen@gmail.com
- Posted in தமிழ்
- No Comments »
Saturday, August 23rd, 2008
நிழல் மறையும் நேரம்
ஒவ்வொரு விடுதலையிலும்
விளங்குகள்
உடைபடுமெனில்
மரணமோ
வாழ்க்கையோ
சிறை எது
புரியவில்லை,
ஒவ்வொரு பிரிவும்
இடைவெளியை கூட்டுமெனில்
நினைவிற்கும்
மறதிக்கும்
உறவென்ன
தெரியவில்லை,
காதலுக்கும்
காலத்திற்கும் இடையே
சூத்திரங்கள்
நிலையிலா கடலலைகள்.
பூமியெனும் வட்டத்தில்
புள்ளிகளாய்
சிதறும் தூரம்
பிரபஞ்ச உறவிற்கு
பிரிவாக தோன்றிடுமோ….
மூச்சடைத்து விளையாடினேன்
சில முத்துக்கள்
கிடைக்குமென்று,
கண்ணடைத்து விளையாடினேன்
சில கவிதைகளை
கனவாய்க்கண்டு,
இது
நெஞ்சடைக்கும் விளையாட்டு
உன்
நிழல் மெல்ல மறையும் நேரம்……
-குளிர்தழல்
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, August 21st, 2008
இறைவனிடம் சென்றேன்!
சொர்க்கம் கேட்டேன்…
இறைவன் சொன்னார்:
அடே பைத்தியக்காரா…
அவள்தான் உன் சொர்கமடா!
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, August 20th, 2008
உனக்காகவே காத்திருப்பேன்….
இந்த ஜென்மத்தில்
நீ என்னை விட்டு பிரிந்தாலும்….
அடுத்த ஜென்மத்தில்
என்னை தேடி
வருவாய் என்ற நம்பிக்கையில்
உன் நினைவுகளுடன்
வாழ்கிறேன்…..
நீ தந்த பிரிவின்
வேதனையின் கண்ணீரோடு……..
by
சுபா
subhacathereen@gmail.com
- Posted in தமிழ்
- No Comments »
Tuesday, August 19th, 2008
இரவோடு குளிர் காயும் நிலவை கேள்,
உன்னை நினைத்து உருகி,
நான் எழுதியே கவிதைகள்தான் எத்தனை என்று!
- Posted in தமிழ்
- No Comments »
Tuesday, August 19th, 2008
மாற்றம்
பொதுநலமாய்
வாழ்ந்த நான்…
உன்னை நேசித்த பின்
முழு சுயநலவாதியாகி விட்டேன்…
நீ சுவாசிக்கும்
மூச்சுக் காற்றும்
எனக்குதான்
எனக்கு மட்டும்தான்
வேண்டுமென்று…
by
சுபா
subhacathereen@gmail.com
- Posted in தமிழ்
- No Comments »