Archive for May, 2008

Friday, May 30th, 2008

கனவு!

                           கனவு!
 
மனிதனை மகிழ்விக்கும் மாயத்தோணி!
இரவும் பகலும் இயைந்து நடக்கும்;
ஏழையைக் கூட  பணக்காரன் ஆக்கும்!
எளியனை நொடியில் அரங்கம் ஏற்றும்!
 
சாதனை மனத்தின் தோரண வாயில்!
நல்ல கனவுகள் மனத்தை வளர்க்கும்;
நாளையப் பொழுதின் விடியலைத்தேடும்;
நொடிந்த மனதுள் உற்சாகம் இசைக்கும்!
 
கனவு வேண்டும் கனவு வேண்டும்
மனதிற்கினிய கனவு வேன்டும்
மானுடம் தழைக்க கனவு வேண்டும்!
கனவை நனவாக்கும் கைகளே வாருங்கள்!
 
கவிவளவன்
 Please visit: www.thaalaattu.net

Wednesday, May 28th, 2008

என்றும் உன்னுடன்

காதலே பிடிக்காத என் நெஞ்சில்
     உன் உள்ளத்தால் காதலை மலரச் செய்தாய் !
ஒரு ஓலையில் உன் உள்ளத்தை அனுப்பியது
     என் உள்ளத்தை எடுக்கவா !
என் மேல் வைத்திருக்கும் அன்பைச் சொல்லத் தெரியாமல்
     நீ சொன்ன அந்த மூன்று வார்த்தையில்
உன் காதலின் ஆழத்தை புரிய வைத்த
     உன்னுடன் என்றும் இருப்பேன் !
நான் என்றும் உனக்காக !!!!……
 
 
by
kalpanarmsh
kalpanarmsh@gmail.com

Wednesday, May 28th, 2008

மிச்சமீதி

 
ஒன்றுக்கொன்று உறவின்றி
முரண்கொண்டிருக்கும்
திருமணமண்டபத்தின்
நுழைவுவாயில் நுழைவு மரங்கள்
 
நாற்புறமும் ஒழுங்கின்றி
சிதறிகிடக்கும்
வாடகை நாற்காலிகள்
 
அலங்கோலப்பட்டிருக்கும்
பலமணி நேரங்களை விழுங்கிய
மேடையலங்காரங்கள்
 
அம்மாக்களுக்கு அல்வா கொடுத்து
கூட்டத்தோடு கூட்டமாய்
கலந்துவிட்ட பொடிசுகளின்
கோரஸான அழுகைசப்தங்கள்
கூட்டம் கலையத்தொடங்கும்போது
 
பலநாள் பட்டினிகிடந்தவர்கள்
பயங்கரமாய் புகுந்தாடியதைப்போல்
ஏகத்திற்க்கு இறைந்துகிடக்கும்
முறையாய் சமைக்கப்பட்டு
நேர்த்தியாய் பரிமாறப்பட்ட
எக்கச்சக்க உணவுவகைகள்
 
அல்பாயிசில் சென்றவனின்
இரண்டாம்நாள் வீட்டின்
மயான அமைதியை ஒத்திருக்கும்
நாலுசுவற்றுக்குள் சற்றுமுன்
நடந்தேறிய திருவிழா
 
இவையெல்லாம் சேர்த்து
பெண்ணைப்பெற்றவரின்
எஞ்சியிருக்கும் வாழ்வை
பறைசாற்றுவதாய் தோன்றுமெனக்கு.
 
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in

Tuesday, May 27th, 2008

வடிவங்கள்

அன்புக்கு வடிவம் அம்மா !
       அறிவுக்கு வடிவம் அப்பா !
பாசத்துக்கு வடிவம் குழந்தை !
      கருணைக்கு வடிவம் கடவுள் !
கற்பனைக்கு வடிவம் நினைவுகள் !
      காதலுக்கு வடிவம் உணர்வுகள் !
அழகுக்கு வடிவம் கண்கள் !
       என் ஆசைக்கு வடிவம் நீ !!!!……
by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com

Monday, May 26th, 2008

Cellphone ஜாலங்கள்

நீ CELL-ஐ பார்த்து சிரிப்பாய் !
    அருகில் இருப்போர் உன்னைப் பார்த்து சிரிப்பார் !
உன் கை விரல் மட்டும் அழுது கொண்டே இருக்கும்
    நீ அதை அழுத்திக்கொண்டே இருப்பதால் !!!……
 
 
by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com

Monday, May 26th, 2008

Cellphone சிணுங்கல்கள்

என் ஜீவனே !
    உன் அழைப்புக்காக காத்திருக்கிறேன் !
நான் உறங்க செல்லும் முன்
    தாலாட்டு கேட்க வேண்டும் !
என்னை தாலாட்டி தூங்க வைக்க
    உன் இசையை எப்பொழுது மீட்டுவாய் !
உனது மணி ஓசை எப்பொழுது கேட்கும் எனக்கு !!!…..
 
 
by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com

Monday, May 26th, 2008

Cellphone

உன் குரல் ஓசை கேட்க
    நான் மணி ஓசை எழுப்பட்டுமா?
 
by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com

Monday, May 26th, 2008

நினைவலைகள்

உன் பொண்ணான நினைவுகள் வீணாகாமல்
       என்றும் இந்த ஏட்டில் நிலைத்திருக்க
இந்த மங்கையின் அன்பு பரிசு இந்த கவிதைகள் !!
 
       உன் நினைவுகளின் போர்வையை போர்த்தி
உன் மடியென்கிற தலையனையில் தலை வைத்து
       உன் நினைவுகளை சுமந்து கொண்டு உறங்க செல்கிறேன்
என் செல்லமாகிய நீ வாங்கி கொடுத்த டெடி பியர் (Teddy bear) பொம்மையுடன் !!
 
       உன் நினைவால் என்னை கவிதை எழுத வைத்தாய் !
 
உன் நினைவுகளின் சுமையிலிருந்து விடுபட
       உன்னை எப்பொழுது எனக்கு காண்பிப்பாய் !!
 
உன்னை நினைக்கும் பொழுது […]

Sunday, May 25th, 2008

வார்த்தை மட்டும்

தோன்றிய பொழுது எல்லாம்
தொலைபேசியை சுழற்றி
தொன தொன என்று
பேசிய நாள்கள்
உன் திருமணத்துக்கு
பிறகும் ……
தொடருமா? என்று
கேட்டதற்கு …
நட்புக்கு முற்று புள்ளி இல்லை
ஆனால்
அளவு கோள் உண்டு
என்று நீ கூறிய
வார்த்தை மட்டும்
இன்று என் வசம்!

Saturday, May 24th, 2008

என் கதை…இது..உண்மை.

     ஆனந்த கவிதை…..
ஏன்டா?..வெறும்
9-ம் வகுப்பு மட்டும் படிச்சு
தலைக்கு மேல் கடன வச்சிக்கிட்டு
தினமும் சாப்பாட்டுகே
கஸ்ட படர உனக்கே இவ்ளொ
கோபம் திமிர் இருந்தா..
நல்லா படிச்சிட்டு மாதம்
16000.ரூபாய் சம்பதிக்கிர
எனக்கு எவ்ளொ திமிர் இருக்கும்!
நீ ஒரு அணாதை…
என் அம்மா டாக்டர். என் அப்பா
லீடிங் க்ரிமினல் லாயர்.
இப்படி ஒரு குடுமப்த்தில்
வளர்ந்த எனக்கு எவ்ளோ திமிர் இருக்கும்.
போய் ஒரு மீன் விக்கிறவள கல்யணம்
பண்ணிக்கோ அப்பா தான் ரெண்டு பேரும்
சேர்ந்து மீன் விக்கலாம்..
ஒ கே.ஆல் த  பெஸ்ட் ஃபொர்  யுவர் ஸொர்ரொவ்ஃபுல் ஃபுசெர்……….!இல்.
கோ.தனசேகரன்… mail. likefish143@yahoo.co.in