Archive for March, 2008

Monday, March 31st, 2008

Avalin Ninaivugal

mani

Sunday, March 30th, 2008

சிறந்தது சிறுபிள்ளைத்தனம்

சட்டென்று
விடைத்துக்கொள்ளும் மூக்கு
எவரேனும் கூறக்கண்டால்
இதென்ன சிறுபிள்ளைத்தனமான
செயல் என்று,
எப்படிப்பட்ட
மூர்க்கர்கள் மீதும்
கஜினியைப்போல்
விடாது படையெடுத்து விடும்
சிறுபிள்ளைத்தனமான செயல்கள்,
கடற்கரையில்
காலாறும் போது
அலைகளில் ஆடும்
மழலைகளுடன்
கலந்து விடத்துடிக்கும்
கால்களை
மணலில் புதைத்து
நிறுத்துகிற போதும்,
ஒளிர்கின்ற
வழுக்கையைப்பார்த்து
சிரிக்க எத்தனித்த வாயை
ஒரு கையால் பொத்த
முயலும் போதும்,
உங்கள் வீட்டினுள் நுழைந்த
அடுத்த வீட்டு பொமேரியனை
தூக்கி வாஞ்சையாய்
நீவி விடும்போதும்,
சட்டைக்காலரில்
ஒட்டிக்கொண்ட பட்டாம்பூச்சியை
அதற்கு இறகு வலிக்காமல்
தூக்கி பறக்க விடும்போதும்,
அடுத்த கணம்                                                                                    அலுவல்கள் ஆயிரமிருந்தும்
தூரத்தில் தெரியும் விமானத்தை
தலைதூக்கி பார்க்க மறக்காத போதும்,
விருப்பப்பட்ட
பொருளொன்றின் விலை
பேரத்திற்குள் சிக்காமல்
வெளிநடப்பு செய்தும்
மெதுவாக தலைதிருப்பி அதை
ஓரப்பார்வை பார்க்கும் பட்சத்திலும்,
உங்களை உணர்ந்து கொள்ளுங்கள்
நீங்கள் சிறுபிள்ளைத்தனமான செயலால் 
மிகைக்கப்பட்டுள்ளீர்களென்பதை.
         எஸ்.எம்.சுனைத் ஹஸனி
       
Please Post your Comments to […]

Friday, March 28th, 2008

திருப்தி

திருப்திப்பட்டுக்கொள்வதை
போன்றதொரு
கஷ்டமான செயல்
ஒன்று இருப்பதாய்
எனக்கு தெரியவில்லை
பழையன யாசிப்பவனுக்கு
ஆட்டுக்கறி அவியல்
படைத்தாலும்
கொஞ்சம் வேகவில்லையென்று
அலுத்துக்கொள்வான்
அழகிய சுந்தரியை
மணாளியாய் அடைந்தவன் கூட
வீட்டு வேலைக்காரியை
கள்ளப்பார்வை பார்க்க
கூச்சப்படுவதில்லை
மனைவிக்கு பரிசளித்த
புடவையின் மதிப்பு
ஈராயிரமாக இருந்தாலும்
எதிர் வீட்டு பரிமளத்தின்
புடவைக்கு இது
கால் தூசியென்பாள்
உணவகத்தில்
பிரியாணியை கூறிவிட்டு
காத்திருப்பவனுக்கு
பக்கத்து இருக்கையில்
பரிமாறப்பட்ட மசால் வடைக்கு
எச்சில் ஊறும்
ஐந்து இலக்க எண்களில்
ஊதியம் பெறுபவனும்
இதில் பாதிமாதம் கடத்துவதே
கஷ்டமென்பான்
வாழ்ந்து முடித்து
பிணமாய் கட்டிலில்
கிடத்திவைக்கப்பட்டிருப்பவன் கூட
என்னுடல் வைக்க
ஒரு குளிர்சாதனப்பெட்டி
கிடைக்கவில்லையா என்று
அங்கலாய்க்கக்கூடும்
திருப்திப்பட்டுக்கொள்வதை
போன்றதொரு
கஷ்டமான செயல்
ஒன்று இருப்பதாய்
எனக்கு தெரியவில்லை.
s.m. Sunaith Hasani 
 
Please Post your Comments To mahasin2005@yahoo.co.in. 

Tuesday, March 25th, 2008

ஹைக்கூ

முட்களுடன் இருந்தாலும்
முகம் சுழிப்பதில்லை
கடிகாரம்

Tuesday, March 25th, 2008

யாரோ அவன்…

யாரோ அவன்…

சாலையில் போகும்போது , கடந்து நிற்கையிலே…
    சாதுவை போல் இருந்து, என்னை இன்பத்தில்
சாகடிக்க போகும் உன்னை தினம்தினம்
    சாலை முழுவதும் பார்க்கிறேன், முகம் தெரியாததால் கண்மூடி…
கருப்போ, சிவப்போ தெரியாது எனக்கு
      கனவில் அடிக்கடி முகம் தெரியாத நீயடா…
கண்ணுக்குள் என்னை நீயும், மணவறையில் நாமும்
      கருவுக்குள் உன்னை நானும் சுமக்கும் நாள் எங்கே?
என் பெண்மையின் உயிர்யென்று, உயிர்பிக்கும்…
      என்னையே உன்னில் தொலைக்க நீயெங்கே…
என் நாளும் என்னை மறக்காமல், எனக்கே
      எனக்காக பிறந்தவனே நீயெங்கே?
தெரியாத வெட்கம் […]

Tuesday, March 25th, 2008

காதலுக்கு தெரியாது…

காதலுக்கு தெரியாது…
நெருப்புக்கு தெரியாது
    அதன் வெப்பம்….
புயலுக்கு தெரியாது
    அதன் திசை….
அலைகளுக்கு தெரியாது
    அதன் வேகம்…
மனிதனுக்கு தெரியாது
   அவன் மரணம்…
அதேபோலதான்…
   காதலுக்கு தெரியாது
       அதன் விளைவு…..
By
prabha
mprabusms@gmail.com

Saturday, March 22nd, 2008

காதல் கட்டுரை……

இளமை பருவம்
     என்னும் கட்டுரையில்
நான் நீ என்னும்
     முன்னுரையில் ஆரம்பித்து
நாம் என்னும் 
     பொருளுரை கொடுத்து
அன்பு என்னும் 
     விளக்கத்தை தந்து
மரணம் என்னும்
     முடிவுரையில் முடிவது காதல்……
by prabhu
mprabusms@gmail.com

Wednesday, March 19th, 2008

எப்படி தேற்றுவது…..

எப்படி தேற்றுவது…..
குழந்தை போல் அழுது அடம்பிடிக்கும்
குழம்பி போன என் மனதிற்கு
என்ன சொல்லி தேற்றுவது…..
நீ எனக்கு உறவு இல்லையென்றா?இல்லை
நீ இறந்து விட்டாய் யென்றா?
இறந்து இருந்தால் உன்னோடு
இறந்து இருப்பேன் சேர்ந்து  இருக்க…ஆனால்
என்னை மறந்து இல்லை
என்னை ஏமாற்றி
என் எதிரே வேறு யாருடனே
வாழும் போது
என்ன சொல்லி
எப்படி தேற்றுவது…..
உனக்காக தினமும் அழுதுக் கொண்டுடிருக்கும்
என் இதயத்திடமும்….
என் காதலிடமும்….
உன்னுடன் வாழமுடியாதுயென்று….
by
subha
subhacathereen@gmail.com

Tuesday, March 18th, 2008

காதல் …

காதல் …
வேலை இல்லாதவர்களின்
  வேலை காதல் …

By
pvmprabhu
mprabusms@gmail.com

Sunday, March 16th, 2008

தமிழா!தமிழா!!

எந்தக் கரங்களும் நீளுவதில்லை
எங்கள் தமிழனுக்கு ஆதரவாய்!
சொந்தக்குரல் எழுப்பி உரிமை கேட்டால்
இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறார்கள் ‘வன்முறை’ என்று!
சொந்தங்களைக் கூட விரட்டிவிட்டு
சொத்து சேர்க்கும் அரசுக்கு
தமிழனை விரட்டினால் என்ன?
வெட்டினால் என்ன்?
எல்லோரையும் வாழவைக்கும் எங்கள் தமிழினம்
எல்லா இடங்களிலும் வாழட்டும் அடிமை இனமாய்!…