Archive for February, 2008
Wednesday, February 27th, 2008
தமிழ்க்கவிகள் › Create New Post — WordPress
Mghr fz;zhb
ngz;Nd kioapy; eide;JtplhNj
cd; fz;zhb Mil cd;id gpujpgspf;Fk;
mofhf my;y Mghrkhf
- uh[Nrfh;. R (jpz;Lf;fy;)
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, February 14th, 2008
துணை…
இருட்டான இரவில் ….
இருவிழிகள் மட்டும்
உறங்காமல் துடிக்கிறது…
இருளுக்கு துணை
என் தனிமை…
என் தனிமைக்கு
துணை…
என் காதலனே
நீ தந்த கண்ணீர்…
சூரியனை விட
அதிகமாகவே சுடுகிறது…
நீ தந்த கண்ணீர் துளிகள்…
என் தனிமைக்கு
துணையாக…
by cathreen
subhacathereen@gmail.com
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, February 14th, 2008
துணை…
இருட்டான இரவில் ….
இருவிழிகள் மட்டும்
உறங்காமல் துடிக்கிறது…
இருளுக்கு துணை
என் தனிமை…
என் தனிமைக்கு
துணை…
என் காதலனே
நீ தந்த கண்ணீர்…
சூரியனை விட
அதிகமாகவே சுடுகிறது…
நீ தந்த கண்ணீர் துளிகள்…
என் தனிமைக்கு
துணையாக…
- Posted in தமிழ்
- No Comments »
Monday, February 4th, 2008
ஆச்சரியம்தான்!
ஒரு கோப்பை மதுவுக்கும்
ஒரு நாள் மாதுவுக்குமாய்
மன்னர்களே மதிமயங்கிய மண்ணில்
எட்டயபுரத்தில் மட்டும்
எப்படி நிகழ்ந்தது - ஓர்
அக்னிக் குஞ்சின் அவதாரம்?
பத்து மாதச் சிறை தந்த
பக்குவமான உயிர் போல்
எரியும் எரிமலையாய்…
தகிக்கும் சூரியனாய்…
நூறாண்டு அடிமைகளின்
நெஞ்சக் கொந்தளிப்புக்
கொஞ்சமும் குறையாமல்
வந்த உருவம் நீ!
சர் பட்டத்திற்கும்
ராய் விருதுக்குமாய்
விதேசிகளிடம் மண்டியிட்ட
சுதேசிகளின் மத்தியில்
தெருவுக்கு வந்த தேசியவாதியே…
பர்தாக்கள் மட்டுமே பவனி வந்த
பறங்கியப் பாரதத்தின்
வேர் தேடி விழுதறுத்த கூர்வாள்-உன்
நேர்கொண்ட நெற்றிச் சுடர்தான்!
இவன் - நம் தேசத்தின் பொக்கிஷம்!
காத்து வைத்திருங்கள் இவனை!
சொன்ன காந்தியால் உன்
காலடிச் சிறப்புப் புரிந்தது!
நீ
எடுத்து வைத்த அடியில் எழும்பிய புழுதி
இந்த மண்ணையே […]
- Posted in தமிழ்
- No Comments »
Sunday, February 3rd, 2008
தவிர்த்திருக்கலாம்…
உனக்கும் எனக்குமான சந்திப்பை!
விதி என்று ஒதுக்கவோ,
சதி என்று மறுக்கவோ
இயலவில்லை.
பூமிக்கடியில் புதையாலாய் - என்
மனதின் ஆழத்தில் உன்னை புதைத்தேன்.
என் தோட்டத்தில் என்றும் வாடாத பூக்களில்
உன் நட்பும் ஒன்று என்று நம்பினேன்.
முழுவதும் மலரும் முன்பே கருகியதேன்?
கதை பேசிய உன் கண்கள் - இன்று
காண மறுக்கும் போது
நொறுங்கி போகின்றன என் கனவுகள்.
உன் அலட்சியம் என் லட்சியத்தையே
அசைத்து பார்க்கிறது!
என் முதல் தோல்வி…
தோல்விகளை தாங்கும் வலிமை உண்டென்றாலும்…
துவள்கிறது என் இதயம்
- Posted in தமிழ்
- No Comments »
Saturday, February 2nd, 2008
என் பேசும் மடந்தையின் பேசா மொழிகள்..!
பேசும் மடந்தையின் பேசா மொழிகள்..!
காலை எழுந்ததும்
ஏன்தான் விடிந்ததோ
என்றே உரைக்கும் உன் கண்கள்..!
காலை பனியிலே
புற்களில் நடக்கையில்
தாளம் போடும் உன் பற்கள்..!
காய்கறி நறுக்கையில்
கைகளில் குலுங்கியே
கானங்கள் படிக்கும் உன் வளையல்கள்..!
சாலையில் நடக்கையில்
வாகன இரைச்சலிலும்
சாதகம் செய்யும் உன் கொலுசுகள்..!
மாலை தென்றலில்
சோலையில் நடக்கையில்
அலையாய் ஆடிடும் உன் கூந்தல்..!
பாசம் வருகையிலும்
நேசம் வருகையிலும்
கேசம் வருடும் உன் விரல்கள்..!
நேரம் கடந்து நான்
இரவில் வருகையில்
எனக்காய் துடிக்கும் உன் இதயம்..!
நான் வடிக்கும் கவிதையை
படித்து முடிக்கையில்
மெல்ல சிரித்திடும் உன் இதழ்கள்..!
உன் பேசா மொழிகளை
தினமும் ரசித்து
கவியாய் உருகும் நானோ உந்தன்???!!!
- காகிதன்
- Posted in தமிழ்
- No Comments »