Archive for December, 2007
Tuesday, December 25th, 2007
என் உயிரைக் கொல்ல…
கத்தியோ கோடரியோ தேவை இல்லை…
உன் கூர் விழிப் பார்வை ஒன்றே போதும்!!
என் உயிரைக் காக்க…
கவசமோ கேடயமோ தேவை இல்லை…
உன் விழி மூடும் இமைகளே போதும்!!
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, December 13th, 2007
உலகமே வியந்த சுற்றுலாத்தளம்
இன்று உலகத்தின் விமர்சனத்தில்
எங்கள் வாழ்வை கருப்பொருளாய்கொண்டு?
எல்லோரும் போல்தான் நானும்
எல்லாம் கொண்டிருந்தேன்
மனைவியும் மக்களும் நான் வளர்த்த மாக்களும் மாடவீதியில் மணிமாளிகைபோல்
ஒரு வீடும் என்று எல்லாம்தான்
நான் கொண்டிருந்தேன் இந்த ஈழ பூமியில்…
கண் நிறைய மகிழ்ச்சி கண்ணீரும்
மனம் நிறைய சந்தோசம் கொண்டு
வாழும் வாழ்க்கை ஒன்று உண்டென்று
கடல் தாண்டி இருக்கும்
தாய் தமிழகத்தில் யாரோ சொல்ல ஒருமுறை நான் கேட்டதுண்டு…
கண்ணில் மட்டுமின்றி காயம் பட்ட இடமெல்லாம் கண்ணீர்த்துளிபோல்
வழிகிறது இரத்தத்துளிகள் இன்று
எங்கள் ஈழ பூமியில்…
அன்பான மனைவி அவள் அகதியாக
சென்ற போது ஆழ்கடலில் மூழ்கிவிட்டாள்
சினம்கொண்ட […]
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, December 12th, 2007
கடல் தாண்டி
ஆண்டு வந்த தமிழ் சமுதாயம்
இன்று கலை இழந்து கவலையோடும்
கண்ணீரோடும் கடலுக்கு நடுவே அல்லல்படுகிறது
வாழ்வு வேண்டுமென்று வந்தோரெல்லாம்
வசதியாக வாழ்கின்றனர் என் தமிழ்நாட்டிலே
இங்கு வாழ்ந்துவிட்டு சென்ற தமிழீழ
தமிழினமோ தவிக்கிறது தண்ணீருக்கும்
தங்குமிடத்துக்கும்….
எக்காலமும் நிக்காது இக்காலம் வரை
தொடர்கிறது சிங்கள இனவெறியை
ஒருக்காலும் அனுமதியாத சுயமரியாதை
யுத்தம்…
தனித்தமிழ் தேசம் காணும் வரை
இது நிற்காது செல்லும் நித்தம்
அதுவரை நம் தோழர்கள் குடும்பத்தை
அரவணைப்போம் அவர்களுள் ஒருவராக
amaithipriyan@gmail.com
www.amaithipriyan.blogspot.com
- Posted in தமிழ்
- No Comments »
Tuesday, December 11th, 2007
Tamil type writer is in the bottom. Please use it to type in Tamil.
Taminglish not allowed.
Admin.
- Posted in தமிழ்
- No Comments »
Saturday, December 1st, 2007
அறிவிப்பு…
கடல் அலையிடம்
சொல்லிவிட்டேன்…..
தோல்வியினால்
மௌனமாய்
உன்னை பார்த்து
கொண்டிருப்பவர்களிடம்
சொல்யென்று….
கரையை கடக்க
தினமும் முயற்சிகொள்……
என்னை போல,
தோல்வியை கண்டு
தோற்றுவிடாதேயென்று…..
By
Subha
subhacathereen@gmail.com
- Posted in தமிழ்
- 1 Comment »