Archive for November, 2007
Friday, November 30th, 2007
இதழ் பிரியாமல் இதழ் மலர்ந்து
சின்னப்புன்னகையால் என்ன நடந்திடுமென்று
எதுவும் தெரியாமல் இருவரும்
சிரித்து வைத்தோம் சின்னப்
புன்னகைதானே என்று
முதல் புன்னகை முதல் வார்த்தையாய்
மாறியபோது தெரிந்திருக்கவில்லை
முடிவில்லா துன்பத்தின் மூலதனம்
இதுவென்று…
வார்த்தை ஒன்று வார்த்தைகளாகி
வாழும் நாளும் வலுப்பெற்று
வந்ததென்றும் சென்றதென்றும் ஏதேதோ
பேசத்தொடங்கிவிட்டோம்
வளர்ந்துவிட்ட நட்புதான் காரணமென்று
நட்பும் ஓர் ஆழ்கடல் என்று தெரியாமல்
மூழ்கிவிட்டோம் முத்துக்குளிப்பதுபோல்
எதையோ பற்றிக்கொண்டு இருவரும்
வெளிவந்துவிட்டோம்…
பற்றியது எதுவென்று பார்த்தபோது
உன்கையில் நட்பின் மறுஉருவம்
என்கையில் காதலின் முழுஉருவம்
உன் கண்ணைக்கண்டு அதில்
என்னைக் கண்டு நான்
காதல் கொண்டேன்-நீயோ
என்னைத் தின்று இருவிழியால்
கொன்று இதழ் மௌனம்
கொண்டாய் அன்று முதல்
காதல் என்ன அவ்வளவு பாவமா…?
amaithipriyan@gmail.com
www.amaithipriyan.blogspot.com
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, November 29th, 2007
உன் வயதோ ஈரட்டு
நீ மலர்ந்த முழு மொட்டு
உன் பேச்சோ சீனி லட்டு
நீ உடுத்துவதோ காஞ்சி பட்டு
உன் மேல் பலர் கண் பட்டு
பட்டது என் நெஞ்சில் வெட்டு
சிந்திக்காமல் சொல்கிறாயே என் சிட்டு
இனியாவது என் மேல் கருணை காட்டு
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, November 29th, 2007
பிரம்மனின் படைப்பில்
பிரம்மனே பிரமித்து போகும்
பிரம்மாண்ட படைப்பு
நீ
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, November 15th, 2007
முற்களின் நடுவோ பல
வர்ணக் கனவுகவோடு
விரிந்த மொட்டுக்கள்
தாகத்தோடு காத்து
நிற்க
கருமேக் கூட்டம்
ஏனோ?
மழைத்துளியாக வரமறுக்க
வாடிக் கருகியது
அழகிய பூக்கள்
கருவேலங்காட்டுக்குள்
- Posted in தமிழ்
- No Comments »
Sunday, November 11th, 2007
பணத் தேடலில் தொலைந்திட்ட
பாவை
செவ்வாய் தோஷம் வந்து
மறைந்திட்ட உயிர் ஓவியம்
எதுகை மோனை க்காய்
வாழ்கின்றது
இங்கே….
- Posted in தமிழ்
- No Comments »
Sunday, November 11th, 2007
எனக்கு நீ எதிரியாய்
உனக்கு நான் எதிரியாய்
உயிருக்கு நாம் எதிரியாய்
உலகிற்குள் வாழ்கின்றோம்
இதுதான் உலகென்று
- Posted in தமிழ்
- No Comments »
Thursday, November 8th, 2007
அங்கே பார்,
இங்கே பார்,
ஒன்ருமில்லை…..
இதுதான் உலகம்.
ந.மோகன்.
கருணாம்பிகை அரிஸி ஆலை.
அவினாஸி.
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, November 7th, 2007
முதிர்க்கன்னி வீட்டில் தடல்புடலாய் கல்யாணச்சமையல்,
அப்பா சமையல்காரர்.
- R.D.Udhayakanth
- Posted in கவிதைகள்
- No Comments »
Tuesday, November 6th, 2007
புற்களம் எல்லாம் போற்களமாய் மாறி
புத்தன் பூமி இன்று இரத்த பூமியாய்
நித்தம் நித்தம் நிம்மதியின்றி வேகிறது
தமிழரினம் பல நித்திரையிலேயே சாகிறது
முற்போக்கு சிந்தனையில்லா மூடர்களிடமிருந்து
தற்காப்பு வேண்டும் என்றுதான்
தமிழரினம் நிற்காது போராடுகிறது
தமிழ்தேசம் வேண்டுமென்று வாதாடுகிறது
மக்களை எல்லாம் மாக்களாய் கொன்று
சிக்கலை வளர்க்கும் சிங்கள கூட்டம்
செந்தமிழ் எடுத்து வளர்த்த தமிழ்
செல்வன் ஒருவனை இன்று
சிதைத்துவிட்டது சினம் கொண்டு
வட்டமிடும் கழுகுகள் கூட்டம் ஒன்று
வஞ்சினம் உள்மனதில் கொண்டு
திட்டமிட்டு செய்துவிட்ட செயலால்
மட்டற்ற சோகம் இன்று
தமிழர்தம் மனதை ஆள்கிறது நின்று
என் செந்தமிழ் செல்வன் அவன்
சிதைக்கப்படவில்லை…
சுதந்திரப் பூக்கள் கொடுக்க வேண்டிய
வேர்கள் விருட்சமாய் வளர […]
- Posted in தமிழ்
- No Comments »