Archive for September, 2007

Sunday, September 30th, 2007

கடமை

கல்வியெனும் பேருந்தில்,
கடமையுடன் பயணம் செய்யும்,
காளையரே, கண்ணியரே,
காதல் போன்ற நிருத்தங்களில்,
கடமைதனை மறந்துவிட்டு - ஏன்,
கால் தடம் பதிக்கின்றீர்…..?

உங்கள் அன்பன்
சோழவேந்தன்

Thursday, September 27th, 2007

பிரிவு

கிளைகள் உதிர்க்கும் இலைகள்
மரணத்தின் சாசனம் என்றிருந்தேன்
பின்புதான் புரிந்தது…
வசந்தம் பிறப்பதற்காக அவர்கள்
பிரிந்திருந்த காலம் அதுவென்று 
அதுபோல்தான்…
எங்களுக்குள் இப்பொழுது
இலையுதிர் காலம்-இன்று
பட்டமரம் போல் நான்
காட்சியளித்தாலும் வசந்தம்
வருமென்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்….
வந்துவிடு என் தேவதையே!
www.amaithipriyan.blogspot.com

Tuesday, September 18th, 2007

நீயே

மரணமே வந்தாலும் -அதன்
விஷமாய் நீ இருக்க வேண்டும்,
பட்டமாய் நான் பறந்தாலும் -அதன்
நூலாய் நீ இருக்க வேண்டும்,
காட்சியாய் நான் தெரிந்தாலும் -அதன்
பொருட்களாய் நீ இருக்க வேண்டும்,
ஏழேழு ஜென்மம் நான் பிறந்தாலும் - நீயே
என் மனைவியாக இருக்க வேண்டும்.
-அன்புடன்
சோழவேந்தன்.

Wednesday, September 12th, 2007

தீயணைப்பு

தீயணைப்பு
அது ஒரு மையிரவு !
தனிமைத் தீவில் அவளும் நானும் !
இருவருக்கும் இடையில்
இனம் புரியா மெளனத் திரை !
திரை விலக்க நீண்டன
இருவர் கரங்களும் !
நீண்ட கரங்களின் தீண்டலில்
கிளம்பியதொரு தீப்பொறி !
பொறி பரவி விசுவரூபமெடுக்க
கையணைத்து, மெய்யணைத்துப்
போராடி தீயணைத்தோம் !
Your comments to kaliarun@yahoo.com

Wednesday, September 12th, 2007

மறக்க முடியாத நினைவுகள்….

காதல்யென்னும் இன்ப சோலையில்
  காதல் தந்தது இன்பத்தை தவிர  அனைத்தும்..
விழி முடி கனவு கண்டேன், பகலில்
    விடை தெரியாத வினாவாக நான்….
விடியகாலை மட்டும் கண்வுறங்கி
    விடியலை தொலைத்தேன், வாழ்வில்….
விளக்கி சொல்ல முடியாத உறவின்
    விடுகதையானது என் வாழ்க்கைஉன்னால்.                    
பிணமான என் உயிரை பெயர்த்தெடுத்து                                                                  பிணம் தின்னும் கழுகாக உன் நினைவுகள்..
பிணமான என் இதயத்தை
    பிணமான பின்னும் போர்த்தொடுத்து கொல்கிறேன் ஓராயிரம் முறை……
பாதை தெரியாத ஊருக்கு பயணம் செய்யும்
    பார்வை அற்றவனின் வழியை விட கொடியது என் சாபம்…
கவிதையாக என் வாழ்வு தொடங்கி […]

Tuesday, September 11th, 2007

பேனாவோடு நான்…

என்னவளே…
என்ன யோசிக்கிறாய்..
உனக்காய் நான் எழுதுவதை இன்னும்
என் பேனா நிறுத்தவில்லையென்றா..?
ஆமாம்..
அதைத்தான் நானும்
யோசிக்கிறேன்
உனக்கு தெரியுமோ தெரியாது
ஏன் என் கவிதைகளில் எழுத்து
பிழைகள் அதிகமென்று
ஏன் தெரியுமா…
என் கவிதைகளை
நான் வாசிப்பதில்லை
வாசித்தால்
ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன்
என்பதை படித்துக் கவலைப்படுவேன்
என்பதால்தான்.
பேனா எடுத்தவர் யாரும்
பேனாவால் இறந்ததில்லை
நான் மட்டும்தான் உனக்காய்
எழுதி எழுதி இறந்து
கொண்டிருக்கிறேன்
இந்த உலகம் கவலைப்படுகிறது
உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன்
என்று
உண்மைதான் அதற்காக நான்
அதிகம் வருத்தப்படுவதுண்டு
ஆனால் அவர்களுக்கு எப்படி
புரியவைப்பேன்…
நான் உன்னக்காய் எழுதுவதில்லை
உன்னால்தான் எழுதுகிறேன் என்று.
உன்னைக் காதலித்தது
மட்டும்தான் நான்
உன்னைக் கற்றுக்கொண்டது
என் பேனாதான்
இல்லையென்றால்..
நான் சொல்வதைக் கேட்டு
எழுதுவதை எப்போதோ
நிறுத்தியிருக்கும்.
நீ என்னைக் காதலித்த
காலங்களை விட உன்னால்
என்னை மட்டும் காதலித்துக்
கொண்டேயிருக்கும் பேனாவின்
காலங்கள்தான் […]

Tuesday, September 11th, 2007

மழை

 
மழை
வானக் கணவனின்
வரதட்சணைக் கொடுமையால்
பூமித்தாயிடம் ஓடி வரும்
மேகப் பெண்ணின்
கண்ணீர்த் துளிகள் !
——————————————–
வான சபையிலும்
சிலம்புடைத்தாளோ கண்ணகி -
முத்துப் பரல்களாய் மழை !
——————————————–
Your comments to kaliarun@yahoo.com

Tuesday, September 11th, 2007

சூரிய மீனவன்

 
சூரிய மீனவன்
வானக் கடலில்
வளைய வரும் விண்மீன்கள் !
மிதந்து மிதந்து வானளக்கும்
மிதவை மேகங்கள் !
கலங்கரை விளக்கமாய்
கவின்மிகு நிலா !
விடியலில் வந்து
விண்மீன் பிடித்துச் செல்வான்,
சூரிய மீனவன் !
Your comments to kaliarun@yahoo.com 
 

Saturday, September 8th, 2007

நினைவில்லாமல் வாழ்வாயா?

நீ தோல் மீது சரிந்த ஒரு தருணம்
நான் மரித்து கிடந்த ஒரு நேரம்…
நீ மருத்துப் பேசிய ஒரு தருணம்
நான் வெரித்து பார்த்த ஒரு மௌனம்…
நீ வெருத்து துரத்திய இத்தருணம்
நான் மரித்து கிடந்த ஒரு பிணம்…
மறக்கச் சொல்கிராய் உன்னை
மடியச் சொல்
மறந்து விடுகிறேன்
மறக்கச் சொல்லி
மனமில்லா பிணமாக்காதே
சூடினாள் உன் கையாள்
மனமேடையில் மலர்மாலை சூடுகிறேன்
வாடினாள் உன் கையாள்
பிணமேடையில் மலர்வளையம் சுமக்கிறேன்
சத்தமில்லா
நித்தம் நிம்மதியான
உறக்கம் கொள்கிறேன்
நீயென்னை
நித்தமும் சிந்திக்காமல்
நிமிடமேனும் நிம்மதி அடைவாயா……?
கா.சரன்

Saturday, September 8th, 2007

என்னவனே…

என்னவனே…
 சூரியனை கண்டதும் தாமரை மலரும்
 உன்னை கண்டதும் மலரும் மலர் நான்..
என்னவனே..
  உன்னை முதல் முதலாக சந்தித்தபோது
  மகிழவில்லை..வருந்தினேன்
  இவ்வளவு நாளாய் ஏன் சந்திக்கவில்லை
  என்று….
என்னவனே..
  இவ்வுலகில் காதலில் வென்றவர்களைவிட
  தோற்றவர்களே அதிகம்
   அதிகம் பேர் உள்ள பட்டியலில்
   சேர்ததற்கு நன்றி…..
என்னவனே…
  உனக்கு நான் காதலர்தின வாழ்த்து
  சொன்னதில்லை
  வருடத்தில் ஒறு நாள் மட்டும்           நினைப்பவர்கள்   சொல்வது அது….
என்னவனே…
     உன்னை சந்திகாத நாட்கள் உண்டு
     சிந்திகாத நாட்கள் இல்லை
     உன் மொழி கேட்காத நாட்கள் உண்டு
     உன் முகம் […]