Archive for July, 2007

Saturday, July 28th, 2007

குரல் கேட்காதா

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

இன்னும் உறங்கும் நண்பன்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது 
  
                                  தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா
என்ற எதிர்பார்ப்போடு…..

இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன்.

 
என்றென்றும்
தோழமையுடன்,
ஜெகதீஷ் […]

Saturday, July 28th, 2007

குரல் கேட்காதா


Saturday, July 28th, 2007

வாழும் பிணங்கள்

                                                                                    வறுமை தான் லாபம் 
கருத்த தோல்,ஏர் பிடித்தே மருத்த கைகள்… 
உலகத்திற்கே சாப்பாடு போட்ட களைப்பில்… 
உடைந்த திண்னையில் உள்ளதால் பணக்காரனாய்(?).. உண்மையான ஏழையாய்! 
என்ன சாபமோ இவர்களுக்கு சாகும் வரை உழைக்கிறார்கள்… 
இவர்களுக்கே தெரியாது இவர்கள் மகாத்மாக்கள் என்று!!!!!!! 
ஆம், இவர்களை உறுஞ்சி வாழும் இந்த உலகதிற்கும் தெரியாது. 
இவர்களுக்கு கடவுள் வைத்த பெயர் “உழவன்” , இந்த உலகம் வைத்த பெயரோ “பாமரன் , படிக்காதவன்” 
ஒர் வேளை இவன் படித்திருந்தால், உலகம் ‘எதை’ சாப்பிடும்? 
அவர்கள் கண்களில் வரும் கண்ணீரைக்கூட இவ்வுலகம் வியர்வை […]

Saturday, July 28th, 2007

கல்லூரி நட்பு

நான் போட்ட பூந்தோட்டம்
நாண்காண்டுகளாய் பூத்துக்குலுங்கியது;
என்னோடு பூத்திருந்த பூக்களெல்லாம்
இன்று புதுப்புது பாதைகளிலே போகிறதே..
காற்று மழை சாரலெல்லாம்
கலகலவென கண்களாலே வரவேற்று
நேற்றுவரை நெஞ்சத்தோடு
நீருடைய பூமி போல் சேர்ந்திருந்தோம்
இன்றோ மாற்று திசைகளெல்லாம் நம்மை
மனதார அழைக்கிறது- நாமிருக்கும்
நட்புலகை விட்டு வேற்றுலகிற்கு
வென்றிட வருக வென்று
நட்பை போற்றி பிரிந்திடுவொம்
நம்நட்பு நாளை இணைத்திடுமென்று;
பிரியாவிடை கொடு எனக்கு
என் பிரியமான தோழியே!
அமைதிப்ரியன்
contace me:amaithipriyan@gmail.com
www.amaithipriyan.blogspot.com

Thursday, July 26th, 2007

காதல் கிறுக்கன்…

காதல் கிறுக்கன்…
 
என் அன்பே…
 உனக்கு நான்
கடிதமே எழுதுவதில்லை
              என வருத்த்ப்பட்டாயே.!
காரணம் சொல்லவா… கண்ணே…
தபால்காரருக்கு தெரியுமா !
உன் முகவறியில்
        முத்திரை குத்துவது
எனக்கு வலிக்குமென்று…!
—V€®Ǿ… ♥♥♥

Monday, July 23rd, 2007

ஹைக்கூ:

இயற்கை படைத்த
இனிய ஹைக்கூ…
அனிலின் முதுகில்!
—\/€®Ǿ…

Monday, July 23rd, 2007

ஹைக்கூ

கற்பனையின்
பிரசவங்களுக்காக
ஒரு தாய்,
உறக்கம் !

Tuesday, July 17th, 2007

எனது கேள்வி…!

பொழுதுபோக்காக ஒரு வகுப்பு நேரத்தில்
பொதுவான விசயம் பேசுவதென்று
எல்லோரும் முடிவு செய்து ஒரு
தலைப்பு தரப்பட்டது… அது காதல்
அதிலும் ஆண்களுக்கு காதலி
முதலில் யார் பேசுவதென்று
விவாதம் நடந்தபோது
நான் பேசவேண்டுமென்று
என்னை நீ மேடையேற்றினாய்
என் காதலி நீதான் என்று தெரியாமல்
என்னை மேடையேற்றிவிட்டு
என் கண்ணை குறை சொல்கிறாய்
உன்னை மட்டும் பார்க்கிறதென்று
என்ன செய்வது….
பூவைத் தேடித்தானே வண்டு வரும்
என்னைப்பற்றி பேச சொல்லியிருந்தால்
என்ன பேசுவதென்று ஏதாவது யோசித்திருப்பேன்
உன்னைபற்றி பேசச்சொன்னதால்
ஒரு நிமிடமும் தயங்கவில்லை
யோசனையில் எப்பொழுதும் நீதானே
கவிதை இல்லாமல் காதலா
கவிதையாய் உரையைத் தொடங்கினேன்
கன்னி அவள் கூந்தல் கண்டு
காரிருள் வந்து கடன் கேட்கிறது
தனக்கு கருமை […]

Saturday, July 14th, 2007

என் காதலி….!

மரக்கிளைகள் தோரணம் கட்டி
தார்சாலை எங்கும் நீர்சாலையாக
மாற்றியிருந்த அழகான
மழைக்கால காலைநேரம்
மனிதர்கள் நடமாட மறந்த
தார்சாலையில் மரக்கிளைகள்
சேமித்த நீர்த்துளிகள்
இலைகளிடையே
சொட்டிக்கொண்டிருக்கின்றன
எனக்குள் சிந்திக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள் போல
யாருமில்லாத அந்தப் பாதையில்
யாரும் சேராது நான் சென்று
ஊரில் யாரும் மிதிக்கும் முன்னே
உதிர்ந்த பூக்களையெல்லாம்
பாவை உன்னைத் தொடுவதுபோல்
பட்டும் படாமல் சேகரித்தேன்
பூவை தாங்கும் பூவைக்காக
போதும் போதும் என்று நீ
சொல்லவேண்டுமென்பதற்காக
உன் பூக்கூடையை விட
பெரியதாகச் செய்ய சொன்ன
பூக்கூடையை தூக்கிக்கொண்டு
பொழுது புலரும் நேரத்தில்-உன்
வாசல் தேடி நான் வர
குழைசாய்ந்த வாழைமரம் போல்
தலைசாய்ந்து நீ
வெட்கமும் புன்னகையும் கலந்து
வாசலில் நின்றிருந்தாய்
கீழ்வானச் சூரியன் போல்
பட்டுக்கொள்ளுமோ
தொட்டுக்கொள்ளுமோ என்று
அறியாது வேகத்தில்
சட்டென்று கூடை இடமாற்றி
சிட்டொன்று பறப்பதுபோல்
பட்டென்று […]

Thursday, July 12th, 2007

எனக்கான உன் காதல்…..?

நாம் இருவரும் சேர்ந்திருந்த
கல்லூரி நாட்களில்-நான்
கண்ட கனவுகளெல்லாம்
என்னை மட்டும் காண்பித்திருந்தது
இருண்ட காட்சிகளாய்
பிரிவு நிரந்தரம் என்ற
நிதர்சன உண்மை
புரிந்தபோதுதான் தெரிந்தது
என் கனவு உன்னையும்
அழைத்து வந்து உன்னுடன்
காதலையும் குடிவைத்தது என்பது
விரல் தீண்டாமல்
விழிகளின் காட்சிப்பறிமாற்றம்தான்
காதலின் ஆரம்பம் எனில்
விழிகள் விழித்த நிலையில்
காணும் கனவுகளே
காதலின் ஆதாரம்
எனது ஆதாரம் உன்
நினைவுகளின் கரம்பிடித்து
எங்கோ ஒரு வழிப்பாதையில்
செல்கிறது…….
இணையாக பின்னே நீ வருவாயா என்றும்
இருவழிப்பாதையாக மாறினாலும்-பின்பு
எதிரே வந்து நீ துணையாக
வருவாயா என்றும் எதிர்பார்த்துக்கொண்டு
போகிறது தன்னந்தனியாக….
எனது காதல்
இன்றுவரை ஒருவழிப்பாதைதான்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு
அடியும் முன்னோக்கினாலும்
எனது விழிகள் இருப்பதென்னவோ
எனது பின்புறம்தான்
தேவதை தேடிவருவாளா என்று
உயிலாக இருந்திருந்தால் உடனே
மாற்றி எழுதியிருப்பேன்
உயிராக […]