Archive for June, 2007

Friday, June 29th, 2007

முரண்பாடு

கனவில் கூட உன்
நினைவு வேண்டாமென்று
கண்விழித்து காத்திருந்தேன்
உன் நினைவுகளின் துணையோடு!
-அமைதிப்ரியன்
contact me:amaithipriyan@gmail.com

Friday, June 29th, 2007

நட்பின் ஆழம்

ஒவ்வொரு நாளும்
தொடர்வண்டி பயணச்சீட்டு
எடுக்கும் வேளையெல்லாம்
நினைப்பதுண்டு
இன்றாவது உன்னை
சந்திக்கமாட்டோமா என்று
என்றாவது ஒருநாள்
நாம் சந்திக்கும் போது
நிற்க நேரமின்றி
பேசிக்கொள்ள வேண்டும்
இருவரில் ஒருவரேனும்
இல்லாதபோதும் தேடி
எடுத்த இரண்டு நிமிடத்தில்
இரண்டாண்டு நினைவுகளை
இரத்தின சுருக்கமாக
பரிமாற வேண்டும்
இரண்டாவது நிமிடத்தின்
கடைசி நொடியில்
உனது கைப்பையில்
தேடியும் கிடைக்காத காகிதத்தால்
என்றாவது இதுபோல்
பயன்பெற வேண்டுமென்று
எனது பையில் சேகரித்த
பயணசீட்டில்
பரிமாறிக்கொள்ள வேண்டும்
ஒருவரின் தொடர்புக்காண
எண்ணை மட்டும்
எனது விருப்பமெல்லாம்
இதுதான்…..
கேட்பது நீயாக இருக்க வேண்டும்
கொடுப்பது நானாக இருக்க வேன்டும்
அப்பொழுதுதான்
உன் மீதான என் நட்பின்
ஆழம் அறியப்படும் !
-அமைதிப்ரியன்
contact me:amaithipriyan@gmail.com
www.amaithipriyan.blogspot.com

Thursday, June 28th, 2007

யாரடி நீ எனக்கு?

எதற்காகவோ விழும் மழைத்துளியை விழுங்கி,                    முத்தாய் துப்பி விடுகிறது சிப்பி !
வளம் தர வரும் கால்வாய் நீரை வாங்கிக்கூட,                                   வேண்டாத முட்புதர் தருகிறாள் நிலமகள் !!
நீ என் சிப்பியா? நிலமா?
 

Wednesday, June 27th, 2007

நாளை வரும்

எழுதாமல்
பக்க நினைவுக்காக
மூடிய பதிவேட்டில்
முடங்கும் பேனா.
 
கணக்கிடாமல்
காற்றுத்  தூக்காதிருக்க
காகிதக்கணமாக அமர்ந்திருக்கும்
கால்குலேட்டர்.
 
காலி நாற்காலிக்குக்
காற்று வீசும்
மின் விசிறி.
 
அவசரம் பற்றி அறியாத காகிதங்கள்
அட்டைக் கட்டுக்குள்
அடக்கமாய்
உறங்கும்.
 
காரியம் தாமதமாவதில்
கவலை தோய்ந்து
வந்துவிடும் என்று
தினமும் வாசல் பார் து
ஏமாறும்
முகங்கள் வந்து
நெஞ்சு கணக்கும்.
 
நடைத்தவம் புரிந்த எனக்கு
‘நாளை வரும்’ என்று
வரம் கிடைக்கும்.
 
நாளை நிச்சயம் வரும்.
 
- அ. இராஜகோபாலன்
          
 
 

Sunday, June 24th, 2007

மழைத்துளி

என் மீது
நீ
படும் போதெல்லாம்
என் உடல்
சிலிர்க்கின்றது
இதனால்
பூவாய்
நனைகின்றேன்
உன்னேடு
தொட்டு சிதறும்
உன் சிதறள்கள்
என்னை விட்டுப்
பிரியாக்
கவிதைகள்

Wednesday, June 20th, 2007

தவம்

இவ்வுலகில் நான்
சுவாசிக்கம் காற்று
நீ என்பதால்
உன்
நினைவிருக்கும்
காற்றிருக்கும் வரை
என் சுவாசத்திற்குள்
காற்றாய்யிருப்பவனே
என் காற்று
உன்
காற்றேடு சேரும்
வரை
உன்
நினைவு கொண்டு
தவமிருக்கின்றேன்
உனக்கான என்
உயிரை தருவதற்காய்

Tuesday, June 19th, 2007

தவம்

….
தயவு செய்து
 மேற்கொண்டு என்னை
  வேறு எதுவும் கேட்காதீர்கள்..
   …
    அவள் ஊர் செல்லும் வழி தவிர
     எனக்கு வேறு எதுவும் தெரியாது..
 
 - நெடுங்காலமாய்..
    கண்கள் கலங்கியபடி,
    ” கைகாட்டி மரம் ” !!!!
.. மகா..

Tuesday, June 19th, 2007

நித்யம்…

…….
  என் சட்டை பொத்தானில்..
  என் கணிணி திரையில்..
  புத்தக இடுக்குகளில்..
  சாலரத்தின் ஓரக்கால்களில்..
  சுவரின் வடுக்களில்…
  நாற்குறிப்பின் ஒரு தேதியில்…
  சில வேலைகலில் கண்ணாடியின்    நடுவில்..
  …….
  ………
  -இன்னும்
  அழிக்கப்படாமலேயே இருக்கின்றன
  உன் நினைவுகள்….!!!!!

Monday, June 11th, 2007

வாழ்கை

எனக்காக நீ
தந்தாய் உனக்காக
நான் இருந்தேன்
இடையில் யாரோவர
என்னை ஏனோ
நீ பிரிந்தாய்
ஆனாலும் உன்
வாழ்கைக்காய் நான்
இன்னும் வாழ்கின்றேன்

Saturday, June 9th, 2007

என்னவளே….!

நான் அறிவேன்…!
என்னவளே   என்னவளே
எங்கிருப்பாய் என்னை விட்டு…..!
உன்னை நான் தொடர்ந்திடுவேன்
உன் நிழலாய்  உன் அருகில்…..!
என்னை நீ தொடர்கின்றாய்
என் நிழலாய்,  என் அருகில்….!