Archive for May, 2007
Tuesday, May 29th, 2007
நான் உன்மனம் விளங்காதவனல்ல
உன் மனம்விட்டு விலகாதவன்
உனை கைதாக்கும் விலங்கானவனல்ல
நம்காதல் கைதியாகிய விலங்கு.
- Posted in தமிழ்
- No Comments »
Tuesday, May 22nd, 2007
என்
இதயமென்னும்
சிறைக்குள்
சிக்கிவிட்ட
உன் விம்பம்
கற்பனைத்
தோட்டத்தின்
கனவுப்ப்பூக்களாய்
இங்கே மலர்ந்தது
- Posted in தமிழ்
- No Comments »
Monday, May 21st, 2007
வெள்ளைரோஜாவே
பூக்களின்வசம்
கொண்டு
மென்மையுடன்
பூத்திட்ட உன்
கண்களின் கண்ணீர்
துளிகள் ஏன்
வந்தது நீ
கல்லறைப்பூவாய்
பூத்து விட்டாய்
என்பதாலா?
- Posted in தமிழ்
- No Comments »
Monday, May 21st, 2007
எனக்கோ
தெரியாது
நீ
விரித்த வலையில்
புள்ளிமானய்
நான்
இரையாய்
நீயெடுத்து
சிதைத்துவிட்டாய்
விதியென
நான்
அழுகின்றேன்
உன்
சதிவலைதெரியாமல்
- Posted in தமிழ்
- No Comments »
Saturday, May 19th, 2007
கோயில் வாசலில் காத்திருக்கும்
பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன்
உன் வீட்டு வாசலில் உன்
புன்னகைக்காய்
*
தயவு செய்து இனி நீ குளிக்கும்போது
பஞ்சாயத்தில் அறிவித்தல் கொடுத்து
விட்டு குளி ஏனெனில் நீ குளிக்கும்
போது ஊர் கிணறு எல்லாம் வைற்றி
விடுகிறது
*
நீ ஊர் கோயிலில் பாடிய தேவாரத்தை
கேட்டு சாமியாக ஆசைபட்டதில்லை
நீ யாரோ ஒரு அனாதையின் இறந்த
வீட்டில் பாடிய புராணத்தை கேட்டுத்தான்
அனாதையாய் இறந்து போக ஆசைப்பட்டேன்
*
நீ படிக்கும் கல்லூரியில் ஆண்களும்
சேர்ந்துதான் படிக்கிறார்கள் நீ வராத
நாட்களில் மட்டும்தான் பெண்கள்
கல்லூரியாய் மாறுகிறது
*
களைப்பில் எந்த இடத்திலும் இளைப்பாறி
விடாதே அந்த இடத்தில் இளைப்பாறியே
களைத்து போகிறேன்நான்
-யாழ்_அகத்தியன்
www.yaalakththiyan.wordpress.com
- Posted in தமிழ்
- 1 Comment »
Friday, May 18th, 2007
உன்னைப் பூ என்று
யார் சொன்னது
நான் சொல்ல மாட்டேன்
உன்னை யாரும் பறிக்காத
போதும் நீ இன்னும்
வாடவில்லையே
-யாழ்_அகத்தியன்
www.yaalakththiyan.wordpress.com
- Posted in தமிழ்
- No Comments »
Wednesday, May 16th, 2007
என் நினைவுக்குள்
மறைந்து
உணர்ச்சிகளுடன்
விளையாடும்
இனிய உணர்வே
காதலா?
- Posted in தமிழ்
- 2 Comments »
Wednesday, May 16th, 2007
தனிமையில் இருக்கும்போது
வாக்கியங்களோடு வாதாடுகிறேன்…!
உன்னுடன் இருக்கும்போது
வாக்கியங்களுக்காக வாதாடுகிறேன்…!!
- Posted in சிதறல்கள்
- 4 Comments »
Tuesday, May 15th, 2007
திருமணத்திற்கான
உன் தேர்வில் நான்வெற்றியடைந்து
விட்டேன்
ஆனால்
நீயோ வாழ்கை
தேர்வில்
என்னை
தோல்வியடைய
வைத்து விட்டாயே
- Posted in தமிழ்
- No Comments »
Sunday, May 6th, 2007
பாரதி நீ
சொன்னாய் நான்
புரட்ச்சி பெண்ணானேன்
பாவியிவள்
பறிதாவமாய்
நிக்கின்றாள்
என்றனர் ஊரார்
- Posted in தமிழ்
- No Comments »