Archive for April, 2007

Tuesday, April 24th, 2007

தமிழ்க்கவிகள் › Create New Post — WordPress

தமிழ்க்கவிகள் › Create New Post — WordPress
 
காந்தி கருப்பனாய்
நான்
ஏழையாய்
பிறந்ததால்
புகை வண்டிகள்
புறகனித்தன
முதல்
வகுப்பை
-முத்து

Monday, April 23rd, 2007

கரையோர மீன்கள்

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர் நால்வரும்! 
புதுமனைவிக்கு
கையசைத்தான் ஒருவன்!
நேற்று தந்தையாக்கிய
குழந்தைக்கு விரலசைத்தான்
மற்றொருவன்!
காதலிக்கு கண்ணசைத்தான்
இன்னொருவன்!
நிச்சயிக்கபட்டவளை
எண்ணி நினைவசைத்தான்
வேறொருவன்!
கடலில் மீன் பிடிக்க
புறப்பட்டன
கடலோர மீன்கள்!
கரையோரத்தில் வாழும்
மீன் கூட்டங்கள்!
சுனாமிக்கும், சூறாவளிக்கும்
தப்பியதில்லை குடிசைகள்!
அடங்கியபின் மீண்டும்
அங்கேயே குடிசைபோடும்,
அசராத கடல் மைந்தர்கள்!
நிச்சயமில்லாத
பயணம்தான் நாளும்!
நிச்சயமில்லாததாலேயே
பயணங்களும் நீளும்!
ஒரு நாள் பயணமும் உண்டு!
ஒரு வார பயணமும் உண்டு!
அதிர்ஷடமிருந்தால்
மீன்கள் சிக்கி
வலையே கிழியும்!
அதிர்ஷ்டம் மறைந்தால்
வீணிலே சிக்கி
வலை மட்டுமே கிழியும்!
வாகனம்,
காட்டிலே பழுதானால்
காலார நடக்கலாம்!
கடலிலே பழுதானால்?!
தூரத்தில் மிதக்கும்
கட்டையும் கூட
காப்பாற்றப்போகும்
படகாய் தோன்றும்!
தண்ணீரும், அரிசியும்
தவணைமுறையில்
உட்கொள்ளவேண்டும்!
கடல்வீதியை
கிழித்துக்கொண்டு
நால்வரோடு பயணமானது
வாழ்க்கைப் படகு!
மேலே விண்மீன்கள்
கீழே கடல்மீன்கள்
இடையே நான்கு ஆண்கள்!
நடுக்கடலில் படகு
இளைப்பாறிக்கொண்டிருந்தது!
வலைவீசி காத்திருந்தனர்!
வீசின ஒவ்வோரிடத்திலும்
மீன்களைத் தவர
வேறெல்லாம் சிக்கின!
அதோ! அங்கே சென்றால்
மீன்களை அள்ளலாம்
என்றான் ஒருவன்!
அவன் […]

Monday, April 23rd, 2007

இந்த பிரிவே போதும் . . .

வழக்கம் போல
பிரிகையில்
எனைக் கேட்டாய்
“என்னைப் பிடிச்சிருக்கா”
என்று  
நான் சொன்னேன்
“இல்லை” என்று
உடனே நீ
அழ ஆரம்பித்துவிட்டாய்
அட லூசு
நீ இப்படிக்
கேட்பதுத் தான்
பிடிக்கவில்லை என்றேன்
அழுத படி
சிரிக்க ஆரம்பித்தாய்
நீ…
சிரித்த படி
அழ ஆரம்பித்தேன்
உன் பிரிவை
எண்ணி
நான் . . .

Thursday, April 12th, 2007

மழை !!

ஹைக்கூ
*************
மேக மீனவனின்
திரவத்தூண்டில்,
மழை !!
–ஜகன்–

Thursday, April 12th, 2007

கல்லூரி வாழ்க்கை

வண்ணத்துப்பூச்சியின் உடை வாங்கி,
வானகத்து மின்னலாய் தலைகோதி,
விரல்களுள் அடங்கும் புத்தகம் சுமந்து,
கண்களில்  ஏக்கம் தெறிக்க,
பூமியின் சொர்க்கத்தில் பாதம் நட்டோம் ,
பிரிவென்பதோர் புயல் வந்து நம்மை
சாய்க்கப்போகும் செய்தி அறியாமல்   !
மாமன் மச்சான் என்று
மரபுகள் இன்றி உறவுகள் வளர்த்தோம்…
கவலைகளுக்கான மருந்தையும்,
இன்பமென்னும் விருந்தையும்,
ஒன்றாய் கொண்டு வலம் வந்தோம் ;
வகுப்பறையின் சுவர்களுக்கெல்லாம்
புத்தகம் காணாத பாடங்கள் கற்பித்தோம் !
ஆசிரியர்களுக்கு தூக்கத்தின் செய்முறை காண்பித்தோம் …..
கன்னிகளை கவர்வதற்காக
கண்களில் காதலுடன் வலம் வந்தோம் !!
ஒட்டிப்பிறந்த பாண்டவர்போல விட்டுப்பிரியாமல்,
நண்பர்களுடனே சுற்றித்திரிந்தோம் ….
அவ்வப்போது வந்த ஊடல் எல்லாம்,
சின்ன விருந்துகளால் மறந்து போனோம்;

Wednesday, April 11th, 2007

கல்லூரி வாழ்க்கை-தொடர்ச்சி

உலகமே நம்மை பார்க்க வேண்டுமென்று,
முடியாத இளமைச்சேட்டைகள் முயற்சித்தோம் …
மரணத்திற்கான தேதி குறிக்கப்பட்ட
மானுடராய் மாறினோம்,
நாம் பிரிவதற்கான நாளை அறிவித்தபோது !

அந்த நாளில் எதிர் கொண்ட நிமிடங்ளில்,

தழுவல்கள்      எத்தனை ?
உறுதிகள்         எத்தனை ?
சத்தியங்கள்    எத்தனை   ?
மன்னிப்புகள்   எத்தனை ?
காதல்கள்         எத்தனை ?

காலத்தின் நீரில் எல்லாமே கரைந்து விட்டாலும்,
மனமென்னும் பாறையில் அதன் சின்னஞ்சிறு
பாசிகளேனும் படிந்திருப்பதை,
நம்மால் இன்னும் உணர முடிகிறதே ! ? !

கல்லூரி என்றுமே கனவுகளின் கூடாரம்தான் !!!!!
இங்ஙனம்,
தோழமையுடன்,
ஜகன் …

Wednesday, April 11th, 2007

அதிசயம்

அதிசயம் :
    நீரின்றி வாழும் மீன்கள் !
உபயம்  :
    என்னவள் மூக்குக் கண்ணாடி !!

–ஜகன்–