Archive for March, 2007

Friday, March 30th, 2007

ஏக்கம்

உச்சி முகர்ந்து முத்தமிட்டும்
பசித்ததும் உணவலித்தும்
தலைகோதி இதம் தந்தும்
தாலட்டி தூங்க வைத்தும்
கதயெல்லம் சொல்லியும்
செல்லமாய் கொஞ்சியும்
அன்பொடும்
ஆதரவோடும்
வளர்த்தும்,
தந்தையின் செயலில்
நிறைவில்லை,
தாயை இளந்த
சில தளிர் மனங்கலிள்…
-கார்திக்கேயன்

Monday, March 26th, 2007

முதிர்வு முன்வந்து நின்ற போது…

ஈரத் தளத்தில் பாவி நடக்கப் பயங்கொள்ளும்  பாதங்கள்.
படிகண்டு தயங்கி  மடித்து ஏற மறுக்கும்  கால்கள்.
விளக்கு அணைத்ததும் வீடு பூட்டியதும்
உறுதிப்படுத்திக் கொண்டதும் மறந்து
மறந்துவிட்டோமோ என்று
பல சமயங்களில் பதைபதைக்கும் மனது.
காலச் சுழலில் நழுவிய இளமையை கன்னாடியில் தேடும் முகம்.
கருமை தொலைத்த தலைமுடி தோன்றி
முதுமை காட்டி நகைக்கும்.
               அ.இராஜகோபாலன்