Archive for February, 2007

Wednesday, February 21st, 2007

பிரிந்தோம்-இணைவோமா

படுக்கையறை
ஜன்னல் வழியே கசியும
நிலவொளி கூட என்னை
கேலி செய்கிறது
நீ என்னருகே இல்லாததை
வெளிச்சமிட்டுக்காட்டி…

Monday, February 12th, 2007

இன்று நாளை ஆகிவிடாதோ

மனம் ஆலாய் பறக்கிறது
இன்று நாளை ஆகிவிடாதோ
என்னவள் என்னை காண வருகிறாள்
கேலி செய்பவரை என் சிரிப்பால் உதாசினப்படுத்தி
ஐம்புலம் அடக்கி
காத்திருப்பேன் என் கண்மணி வரவை எதிர்நோக்கி
மனம் புரியாமல் தவிக்கிறது
இன்று நாளை ஆகிவிடாதோ
நாளை என்னவள் என் கைப்பிடிப்பாள்
விழி அசைவில் நாடி நரம்பு முறுக்கேற்றுவாள்
ஓரப்பார்வையில் ஓங்கி வளரும் என் தாபம்
உள்ளுணர்வை அடக்கி தவித்திருப்பேன் நானும்
மனம் ஆசையில் துடிதுடிக்கிறது
இன்று நாளை ஆகிவிடாதோ
என்னவள் அருகில் வர என் உயிர் கூச்சேரிய
என்னை உரசுவாள் என்று நானிருக்க
அமுதம் சொறியும் விழிகளில், நக்கலாய் ஒரு பார்வை
மடையா! நமை சுற்றி நண்பர்களுண்டு;
மறவாதே […]

Monday, February 12th, 2007

இரயில் பயணம்

தயிர் சாத சட்டியுடன் கொளுத்து வேலைக் கும்பல்
கேலியும் கூத்துமாய் ஒரு நோட்டை கையில் சுழற்றியவாறு காலேஜ் கும்பல்
புத்தக சுமையோடு சந்தோஷ சிரிப்புடன் சிறுவர் கும்பல்
முண்டியடித்து இடம் கிடைத்த நிறைவுடன் அலுவலக கும்பல்
இடம் கிடைக்காத எரிச்சலுடன் ஒரு கும்பல்
வயதானவர்கள் வர எழுந்து இடம் கொடுக்கும் தியாக செம்மல்கள்
எக்காள சிரிப்புடன் இடி மன்னர்கள் ஒரு புறம்
இத்தனை நெருக்கடியிலும் சுரண்டுவதே தொழிலாய் கொண்ட வக்ர புத்திக்காரர்
அவரவர் இடம் வர விசுக்கென்று இறங்கும் மனிதர்கள்
அவசர கதியில் இயங்கும் நம் வாழ்வு
அலுவல் நோக்கி தினம் […]

Monday, February 12th, 2007

மழை

இரசித்து கண் கொட்டாமல் பார்த்தேன் ஜன்னல் வழியே
மெல்லிய தென்றல் மேனி தழுவியது
தூறல் முகத்தில் மோதியது
கதவில் தொங்கிய திரைச் சேலை படபடத்தது
நிதானமாக ஆரம்பித்த மழை வேகம் பிடித்தது
மெய் மறந்து நின்றேன்
நானும் மழையும் மட்டுமே அங்கு
என்ன ஒரு சப்தம்; என்ன ஒரு கம்பீரம்
சாரல் பட்டு சிலிர்க்கும் என் மேனி
காற்று வேகமாக அடித்தது
மழை சற்றே அலைக்கழிந்தது
பட்டென அறைந்து சாத்தியது ஜன்னல் கதவு
என் எண்ணம் இடமாறியது
சகதியாய் ஓடும் மழை நீர்
முகம் சுளித்து, அருவருப்புடன் அதில் நடக்கும் மனிதர்கள்
குடை ஒரு கையில்; சேலை பாவடையுடன் […]

Monday, February 12th, 2007

நானும் கர்ப்பஸ்த்ரி தான்

எனக்குள் நீ வந்தாய்
கலைத்துவிட மனதில்லை
உன் நினைவுகளை சுமந்தேன்
உரம் போட்டு வளர்த்தேன்
என்னுயிர் கொடுத்தேன்
உன் துடிப்பில் நான் மகிழ்ந்தேன்
ஜனிக்கும் நாள் பார்த்து தவமிருந்தேன்
கனிக்க மருத்துவரில்லை
கேலி செய்யும் நண்பர்களுண்டு
விடாது உன்னை சுமந்தேன்
காலமெல்லாம் சுமந்தாலும் கனமாக தெரியாதது ஏனோ
அடக்கி அடக்கி வைத்த உன் நினைவுகள்
முட்டி மோதும் போது உன்னை வெளியில் விட நினைத்ததுண்டு
மூடி மூடி வைத்தாலும் முடியவில்லை பெண்ணே
நீயாக நீ வரும் நாளை சொல்லிவிடு
ஜென்ம ஜென்மமாக காத்திருப்பேன்
நிரந்தர கர்ப்பிணியாக என்னை விட்டு விடாதே கண்ணே
– காட்டாறு