Archive for December, 2006

Sunday, December 31st, 2006

அதிசயம்

ஈரிதழ் பூவடீ
நீ
என் நாவிதழ்
சுவைக்கும் போதெல்லாம்
தேன் வார்க்குதடீ
            கா.சரன்

Tuesday, December 12th, 2006

போர்க் களக் காட்சி

போர்க் களக் காட்சி
 
என் தோப்பு மரங்கள் போர்க் கோலத்தில்
எதிர் வரிசையில் எதிர் வீட்டான் மரங்கள்
இடையில் அகழியாய் ஓடை நீர்
சென்ற போரில் சிந்திய இரத்தத்தில் சிவந்த மண்
பாவம், சமாதானம் வேண்டி
இங்குமங்கும் அலையும் பறவைகள்.
 
 
 

Tuesday, December 5th, 2006

உலகின் முதல் தெய்வம்

தன்னை எரித்து வெளிச்சம் கொடுக்கும் மெழுகு பொல்
தாய் தன்னை பட்டினிபோட்டு பிள்ளைக்கு உணவு கொடுப்பள்
திரன்மிக்க மனிதனை  மேம்பட வளர்ப்பது தாய்
தீராத நோய் வந்த மகனையும் சுமப்பாள் தாய்
துரும்பு கூட த்ன்னை கவனிக்காமல் வாழ்பவழ் தாய்
தூக்கி சுக்க சொல்ல வில்லை
தெருவில் விட்டு விட சொல்ல வில்லை அன்பும் அரவணைப்புகாட்டு
தேசம் போற்றும் அன்னை தெரச நி வணங்குவதுபோல் பொய் வேடம் போடதெ
தைரியம் கொடுத்து வளர்தாள் தாய்
தொப்புள் கொடியில் வளர்ந்த உரவை தூக்கி எரிந்துவிடாதே மனித
தோல்வி என்று வரும்போது அன்னை என்னிபார் […]

Friday, December 1st, 2006

நிகழ்வியல் கடமை (கலிவெண்பா)

நிகழ்வியல் கடமை (கலி வெண்பா)
வார்குழல்  மங்கைதம்  வாணுதல் பாடவே,
ஊரெங்கு(ம்)  ஆயிரமாம்  உல்லாசப் பேர்ப்புலவர்!
கூர்வாளின் கூரன்ன கோதாங் கருக்கொண்டு
நேரான பாவிசைபீர்; நீணிலத்தி‎ன் பாவலர்காள்!
‏இ‎ங்கே இயற்கையெனு(ம்) ஏந்திழையைப் பாடுகையில்
பொங்கும் செயற்கையெனும் போலியையும் சாடிடுவீர்;
நங்கையரி‎ன் நாணத்தை நாமணக்கப் போற்றுகையில்
கங்கிருளாம் ஈனத்தைக் கைநோகத் தூற்றிடுவீர்!
கேடில்லாச் செம்மொழியின் கண்ணியத்தைப் பாடுகையில்
ஈடில்லா தாய்மொழியை இ‎‎‎ன்றிளையர் தாம்வெறுக்கும்
நாடிருக்குங் கீழ்நிலையை நாடாள்வோர் சிந்திக்கச்
சாடிநும் பாக்களிலே சாற்றியே கோடிடுவீர்!
மண்ணிலே தோ‎‎ன்றிய மாந்தர்நம் வாழ்க்கையிலே;
எண்ணிலாப் பாடங்கள்‏ எத்தனையோ கற்கி‎ன்றோம்!
மு‎ன்‎னோ(ர்) உரைத்த முதுமொழிக(ள்) ஆயிரமாம்;
கண்ணெனக் காத்து, கருத்தெனவே கொள்வோம்!
செழுங்கதிர் தீட்டுஞ் சிவப்புமொரு பாடம்;
மழுங்கிருட் […]