Archive for November, 2006

Thursday, November 30th, 2006

காதல் காதல்

காதல் ஒரு கன்னாடி
காதலிப்பவன் முகம் தெரியாது

Friday, November 24th, 2006

முரண்

முரண்
 
பேருந்தில்
பெண்களை இடிப்பவரைக் கண்டு
கோபத்தில் கொதிக்கிறது மனம்,
பின்னால் உரசியபடி நிற்கும்
பெண்ணின் ஸ்பரிசத்தில் மயங்கியபடி .
 

Monday, November 20th, 2006

சாமியான என் அம்மா

என் அம்மா, காலையில
தூங்கிய என்னை அழ அழ எழுப்பி
முத்தம் கொடுத்து, கொஞ்சி,
குளிக்க வைத்து, சாமி கும்மிட வைத்து,
தல வாரி, சீருடை அணிவித்து
இட்லி ஊட்டி, பள்ளிக்கு அனுப்பினார்
பள்ளியிலிருந்து பாதியிலே
கூட்டி செல்ல வந்தார் என் மாமா
என் தலைமை ஆசிரியர் கலங்கிய கண்களுடன்
என் வகுப்பு ஆசிரியரிடம் பேசினார்
பின், என்னை இறுக அணைத்து அனுப்பி வைத்தார்
என்னை எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிற மாதிரி இருக்குது
வர்ற வழியெல்லாம் வழக்கம் போல்
வள வளன்னு பேசிட்டே வந்தேன்
அம்மா சாமி கிட்ட போயிட்டார்டா
என்றார் என்னை கட்டிப் பிடித்து
சாமி கிட்டேயா? […]

Monday, November 20th, 2006

எப்படி முடியாது போனது உன்னால்

கருவறையிலிருந்து உதைத்து வெளி வர தெரிந்த உன்னால்…..
நடை பழகிய போது தட்டு தடுமாறி மீண்டும் எழ தெரிந்த உன்னால்…..
சைக்கிள் பயில்கையில் எத்தனை முறை கீழ் வீழ்ந்து தைரியமுடன் எழுந்தாய் நீ
தோல்விகளை சந்தித்து ஏற்ற பாதையில் முன்னேற முடிந்த உன்னால்…..
வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை நேருக்கு நேர் சந்திக்க முடிந்த உன்னால்…..
கேள்வி பல கேட்டு விதி முறைகளை மாற்ற எண்ணிய உன்னால்…..
பாழும் நீரில் மரணத்தை எதிர் கொள்ள தயங்கியது ஏனோ
உடைந்து அழும் உன் தாயுள்ளம்
வற்றிய கண்களுடன் உன் தந்தை
கண்ணிமைக்க மறந்த […]

Thursday, November 9th, 2006

நீ மட்டும்

நான் வழிபட இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள் இருக்கின்றன..
நான் பின்பற்ற இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள் இருக்கின்றன..
ஆனால்
    நான் காதலிக்க
    இந்த உலகத்தில்
    நீ மட்டும்தான்
    இருக்கிறாய்…!

Thursday, November 9th, 2006

அன்பு

பேகன் போல மயிலுக்கு
போர்வை தர வேண்டாம்..
பாரி போல முல்லைக்கு
தேர் தர வேண்டாம்…
சிபி போல புறாவுக்கு
சதை தர வேண்டாம்..
நெஞ்சில் ஈரம் மட்டும் வார்ப்போம்…
அதில் பாசம் கொஞ்சம் விதைப்போம்…
அன்பு கொண்ட உள்ளத்தை விட
அகிலத்தில் உயர்ந்தது
வேறென்ன???

Wednesday, November 8th, 2006

புது வைரம் நீ !

புது வைரம் நீ !
 துடிக்கும் இரத்தம் கொண்ட தோழனே,
துவண்டு விடாதே !
இனிக்க இனிக்கப் பேசி
இருளில் தள்ளும் உலகமிது !
உன்னை உணர்ந்து நட !
உன்னையே நீ அறி என்றவன்
ஒப்புக்குச் சொல்லவில்லை !
உன் உறவுக்குத் தகுதியில்லார்
உன்னை உதறுகின்றார் !
வைரத்தை உதறுவதால் யாருக்கு நட்டம் ?
வைரம் நீ !
குப்பையில் கிடந்தாலும் குன்றுவதில்லை
உன் மதிப்பும் ஜொலிப்பும் !
கிளறிப் பார்க்கும் கோழிகள் அறியாது
உன் மதிப்பை ! என்றாவது ஒருநாள்,
உன் திறனறிந்தோர் கண்களில் படும் போது
நீ பட்டை தீட்டப்படுவாய் !
பார் புகழ பட்டங்கள் பல பெறுவாய் […]

Monday, November 6th, 2006

அம்மா!

அம்மா! அம்மா!
அம்மா! அம்மா! பொன்னம்மா!
உன் பெயரைப் போல
உன் மனசு முழுக்க பொன்னம்மா!
சிறகுகள் இல்லை! இல்லை!
ஆனாலும் நீ தேவதைதான்!
பொன்னகையை விட மதிப்புகூட
உன் புன்னகைதான்!
பத்துமுறை கூப்பிடம்மா,
என் பெயரை சொல்லியே!
எனக்கு பத்து வயசு
குறையுமம்மா உண்மையே!
பூக்களில் படுக்கை செய்து
படுத்தும் பார்த்தேனே!
அதுவும்கூட,
உன் பொன்மடிக்கு ஈடு இல்லையே!
சித்ரா சுசீலா ஜானகி
பாட்டும் கேட்டேனே,
ஆனாலும் எதுவும்
உன் தாலாட்டு போல இல்லையே!
என் பக்கத்தில் நீயும் நிக்கிறப்ப
எந்த லோகமும்
எனக்கு சொர்க்க லோகம்தான்!
கோபத்தில கூட நீ அழகிதான்!
நீ அடிக்கிறப்ப நான் அழுவது நடிப்புதான்!
பத்து மாதம் நீ என்னை
பார்த்துகிட்ட பக்குவமா!
நான் இந்த வாழ்க்கை முழுதும்
உன்னை […]

Saturday, November 4th, 2006

என் காதல்

ஒரு தாய் தன் குழந்தை
சோறுட்டுகையில்
நிலவை காட்டுவது மாதிரி
காதல் எனக்கு உன்னை காட்டியது…
குழந்தை பரவசமாய் நிலவை
பார்த்து கொண்டிருக்கையில்
தாய், தன் குழந்தையின் வாய்க்குள்
உணவை ஊட்டியது மாதிரி நான்
உன்னை பரவசமாய்
பார்த்து கொண்டிருக்கையில்….
காதல்
எனக்குள் ஊட்டியதுதான்
இந்த வாழ்க்கை!!!!

Wednesday, November 1st, 2006

நேற்றைய மிச்சங்கள் !

நேற்றைய மிச்சங்கள் !
நேதாஜி என்ற பெயர் கொண்டு
குமுறிப் பாய்ந்த எரிமலையின்
சாம்பல் மட்டுமே இன்று மிச்சம் !
 
காமராஜ் என்ற கதர்ச்சரித்திரத்தின்
கொள்கைகள் சிக்கிக் கிழியும்
கதறல் மட்டுமே இன்று மிச்சம் !
 
பஞ்ச சீலக்கொள்கை சொன்ன
ஜவஹரின் நாட்டில்
பஞ்சம் மட்டுமே இன்று மிச்சம் !
 
வன்முறையில் நன்முறை கண்ட
வாஞ்சிநாதன் வாழ்ந்த நாட்டில்
வன்முறை மட்டுமே இன்று மிச்சம் !
 
சட்டத்தை உருவாக்கிய
சாகச அம்பேத்கரின் சட்டத்தில்
ஓட்டைகள் மட்டுமே இன்று மிச்சம் !