Archive for August, 2006

Thursday, August 31st, 2006

கடல்

அதிசயமாய் இருக்கிறது இத்தனை காதலர்களின் காலடிச் சுவடுகளை உள்ளிலுத்தும் கடல் இன்னும்  உப்பு கரிக்கிறது!!!3

Thursday, August 31st, 2006

ஆத்தங்கரை ஓரத்திலே

ஆத்தங்கரை ஓரத்திலே
ஆறு மணிக்கு வருவேன்னு
சொல்லிவச்சிப் போனவளே,
சொன்ன சொல்லு மறந்திடுச்சா? - வீட்டில்
பாத்து வச்ச மாப்பிள்ளையை
பாத்ததுமே என் நினைப்பு
நெஞ்சை விட்டுப் போயிடுச்சா?
நேசம் தான் செத்திடுச்சா?
காசு பணம் இல்லையின்னு
கை கழுவிப் போனாயோ?
கண்ணுக்கழகா இல்லையின்னு
கதை சொல்லிப் போனாயோ?
வீட்டுக் கஷ்டம் தாங்கலேன்னு
விடை சொல்லிப் போனாயோ? – நான்
படும் கஷ்டம் பாத்திருந்தும்
பைங்கிளியே போனாயோ?
ஆத்தங்கரை ஓரத்திலே
அன்பே நீ வருவாயா?
ஆறு மணி ஆகி விட்டால்
அங்கே தான் நானிருப்பேன்

Wednesday, August 30th, 2006

சிறியதாய்

அன்பு என்ற தலைபில் சிறிய கவிதை கேட்டார்கள் உடனே கூறினேன் “அம்மா” என்று, கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சிறியதாய் “நீ”என்று கூறியிருப்பேன்!                

Wednesday, August 30th, 2006

விபத்து

புது வண்டியில் முதல் விபத்து……
எலுமிச்சை பழம்!

Sunday, August 27th, 2006

அறியாமை

ஒரு நாள் நீ என்னிடம் வந்து கேட்டாய்:
நான் முக்கியமா? இல்லை உன் வாழ்கை முக்கியமா? எனக் கேட்டாய், வாழ்க்கை்கை என்றேன் , நீ திரும்பி சென்றாய், என் வாழ்க்கையே நீதான் என்று தெரியாமல்……..

Thursday, August 17th, 2006

அவளின் கண்கள்

பூமிக்கு..
ஆறடி மீதம்.
உனது
கண்கள் எனது
கல்லறை
ஆனதால்.

Sunday, August 13th, 2006

நாள் வருமோ

சிரித்து பேசும் 
உன் உதடுகளாலே 
பறித்து கொண்டாய் 
என் இதயத்தை 
விழித்து பார்க்கும் 
உன் விழிகளாலே 
அழித்து விட்டாய் 
என் ஆனவத்தை 
 
கருத்த கூந்தல் கோதும் 
உன் விரல்கூட 
நிருத்தி வைத்தது 
உன் நினைவுகளை 
 
செதித்து வைத்த முகவழகால் 
இன்று 
சிதைத்து விட்டாய் 
என் உயிரை 
சிந்தித்து உன்னில் வாழ்கிறேன் 
உன்னை சந்தித்து பேசும் 
நாள் வருமோ 
               robert

Saturday, August 12th, 2006

காதலும் கருவரையே

என்…
இதயமும்
உன் தாயின்
கருவரைதான்.
ஆனால்..
உன்னை
காலமெல்லாம்
சுமக்கும்.

Monday, August 7th, 2006

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

குடும்பத்தில் வித்தியாசம் கண்டு கொண்டேன் -
சிலர் கடிப்பார் சிலர் சிரிப்பார்
உண்மை சிலர் வாழ்க்கையில்
நிஜம் சிலர் வாழ்க்கையில்
மனிதர்களின் எண்ணங்கள்போல அவர்களது வண்ணங்கள் -
ஏழ்கடல், ஆறு உலக அதிசயம் கண்டேன்
ஒரு உண்மை மனிதனைக்காணவில்லை காணவில்லை
ஆயிரம் பெண்கள் நான் அறிந்தும்
ஒரே மனம் கொன்ட இரு பெண்கள் காணவில்லை காணவில்லை
கண்ணாடிக்கும் கடலுக்கும் ஒரு ஒற்றுமை இரண்டிலும் இரண்டு
பக்கம் ஆனால் ஒரே வெட்கம் பார்ப்பவர்களுக்கு
வளர்ந்தது வீழ்ந்தது சீனாவில்
குமுறியது இங்கிலாந்தில்
சிரித்துக்குலுங்கியது கினியாவில்
வளர்ச்சி அடைந்ததது ச்பெயினின் கடற்கரையில்
வெற்றி பெற்றது பின்லாந்தில்
மடிந்தது மைனேயில்
இடங்கள் தோற்றங்கள் […]

Saturday, August 5th, 2006

காலப்பயணம்

அழுது பிறந்த
என்னைச் சுற்றி
சிரிப்பாய் சில முகங்கள்!
தடுக்கி விழுந்த
என்னைத் தாங்கிப்
பிடித்த கரங்கள்
தேவைகள் அறியும் முன்னரே
சேவைகள் செய்தவர்கள்
தோளில் பை
சுமந்த நேரத்தில்
தோழமை வளர்த்தவர்கள்
நான் துவன்டுவிடும் போது
என் துணையாய்
நின்ற நண்பர்கள்
மணம் என்னும்
கயிற்றால் என்னோடு
கட்டுன்டவள்
உறவுகளாய் சிலரும்
வரவுகளாய் சிலரும்
ஆகிய அனைவரும்
அழுது தோய்ந்த முகத்துடன்
நான் மட்டும்
சிரித்த முகத்துடன்
மரணப் படுக்கையில்.