Archive for July, 2006

Monday, July 17th, 2006

என்னருகில் நீ

                                          
 
நிழல் இருக்கும் போதெல்லாம்
உடல் இருக்க்ம்…

இரவு தூங்கும் போதெல்லாம்
இதயம் விழித்திருக்கும்…

கவிதை பிறக்கும் போதெல்லாம்
பொய் பிறக்கும்…

அன்பு அதிகப்படும் போதெல்லாம்
ஆசை அதிகமாகும்…

இரவு நகரும் போதெல்லாம்
பகலும் நகரும்…

மலர்கள் மலரும் போதெல்லாம்
வண்டுகள் வளம் வரும்…

இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று
இணையும் போது

நான் இருக்கும் போதெல்லாம்
நீ இல்லையே?

இயற்கையிடம் இயற்கையே
தோற்கிறதடி அன்பே!

என்னருகில் நீ இல்லாததால்…