Archive for April, 2006

Saturday, April 29th, 2006

எனது கிறுக்கல்கள்

அன்பே
எனது விடியல் என்பது
உந்தன் விழியில்
எனது மரணம் என்பது
உந்தன் மடியில்…..!!!!!!!
நீ இன்றேல்
நான் நிச்சயம்
தற்கொலை செய்ய மாட்டேன்.
என் உணர்விலும்
உயிரிலும் கலந்திருக்கும்
உன்னைக் கொல்ல
எப்படி மனம் வரும் எனக்கு…..?
தினமும் சொல்ல வேண்டும்
என்றுதான் வருவேன்…
ஆனால் உன் கண்களால்
சிவப்பு கொடி பிடிக்கிறாயே…!!!!!
உன் சிரிப்பினால்
என் வார்த்தைகளை சிறை பிடிக்கிறாயே….!!!!!
என் இதயத்தில்
ஓட்டை என்று டாக்டர்
சொன்னபோது நம்பவில்லை..
என் இதயத்தில் நீ நுழைந்த போதுதான்
அது புரிந்தது
நானோ உன் காதல் வேண்டும் என்றேன்.
நீயோ என் கவிதை தான் வேண்டும் என்றாய்…
அடி பைத்தியக்காரி…
எப்படி கவிதை எழுதமுடியும் என்னால்
உன் காதல் இல்லாமல்….?
இந்த உலகத்தில் சிறந்த தண்டனை
என்னவளின் […]

Thursday, April 20th, 2006

புயலால் கலைந்த கோலங்கள்

புயலால் கலைந்த கோலங்களிலும்
புழுதியாய் உன் நினைவுகள்,
அலை ஒன்று வந்து அள்ளிச்சென்றது
கரையை அல்ல என் மனதை,
பனித்துளியே துளியே உனைநான் எப்படி
வெப்பத்தில் வடிவமைப்பேன்,
இளந்தளிரே தளிரே உனைநான் எப்படி
நீரின்றி வாழ வைப்பேன்,
என் காதலே என் காதலே
உனை எப்படி நான் மறப்பேன்!
உனை நான் பார்த்த ஒரு நொடிப்பொழுதில்
சொர்க்கமே வந்து சேர்ந்ததடி,
எனை நீ பார்த்த ஒரே கனம் என்
வாழ்நாள் முழுதும் போதுமடி,
என் உயிர்த்துளி எழுந்து என் இதயத்தில் புகுந்து
காதலை வள்ர்த்துச் சென்றதடி,
உன் கணிப்பொறி வார்தையின் கனல் வந்து விழுந்து
என் காதலை எரித்து சென்றதடி,
புயலால் […]