Archive for the 'கவிதைகள்' Category

Friday, July 2nd, 2010

விதியின் விளையாட்டு

மழையின் மரணத்தை
சிறிதாவது நீடிக்க
ஒரு மரம் கூட
இல்லாப் பாலையில்
பெய்யும் மழையாய்…

ஒரு ஏழையின்
வயிற்றில் குடிபுகுந்த
புற்று நோய்
மருத்துவமனையை மட்டும்
வடிகட்டி
மரணத்திற்கு வழிகாட்டுகிறது

Monday, February 22nd, 2010

தீபாவளி

புறப்படுகிறது ஒரு ரயில்
சென்னையில் இருந்து டெல்லிக்கு  .
போய் சேர இரண்டு  மூன்று நாள் கூட ஆகலாம்.
இந்த மொட்டை மாடி
பட்டாசு சத்தம்
அவர்களுக்கு
ஜன்னல் கம்பிஇநூடே தெரியும்
சாலையோரப்பூக்கள்
இன்று நாம் கொண்டாடுவது
தீபாவளியை அல்ல
அவர்களுடைய கனவை .
தீபாவளிக்காக அல்லாவிட்டாலும்
அவர்களுடைய வரவுக்காகவாவது
பட்டாசு வெடிப்போம் !!

Sunday, February 21st, 2010

விரதமும் பட்டினியும்

காய்த்து கனிந்த
மரமும்
காய்ந்து கருகிய
மரமும்
காய்கிறது வெய்யிலில்

Friday, September 19th, 2008

மாயம் செய்கிறாய்!!!

நீ உச்சரிக்கும் போது  மட்டும்
அழகாய் தோன்றும் என் பெயர்
நீ அழைக்கும் போது மட்டும்
செல்லமாய் சிணுங்கும் என் தொலைபேசி
நீ நெருங்கும் போது மட்டும்
அலைபாயும் என் விழிகள்
நீ அருகில் இருக்கும் போது மட்டும்
பேச மறுக்கும் என் இதழ்கள்
நீ தொலைவில் இருக்கும் போது மட்டும்
கவிதையாகும் என் எழுத்துக்கள்
என்ன மாயம் செய்தாய் எனக்குள்
சொல்லி விடு என்னிடம் மட்டும் !!!
 

Saturday, August 16th, 2008

என்னவனே!!!

உனக்கான என் கனவுகளுடன் விழித்துக் கொண்டிருப்பேன் நான்
தட்டி எழுப்ப நேரமில்லாமல் வ‌லைத் த‌ளங்க‌ளில் ஆழ்ந்திருப்பாய் நீ
உன் செல்பேசி அழைப்புக்காக‌ நாளெல்லாம் காத்திருப்பேன் நான்
வேலையில் ம‌றந்து விட்டேன் என்பாய் நீ
உனக்காக‌வே புத்தாடை உடுத்தி நிற்பேன் நான்
கண்டு கொள்ளாமல் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பாய் நீ
உன்னிட‌ம் ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்காக‌வே சின்ன‌ சின்ன‌ சேதியுட‌ன் காத்திருப்பேன் நான்
கேட்காம‌ல் அவ்வ‌ள‌வு தானே என்பாய் நீ
உன்னிட‌ம் கோப‌ம் கொன்டு பேசாமலிருப்பேன் நான்
க‌ண்டு கொள்ளாம‌ல் தேநீர் ப‌ருகுவாய் நீ
இத்த‌னை  குறைக‌ளையும் நிறைவாக்கி விடுகிறாய்
என்னுடன் பேசும் அந்த‌க் க‌ணம் […]

Thursday, July 17th, 2008

பிடிக்கும்…

என்னை பிடிக்கும் என்பதால்                                                                                எனக்கு பிடிக்கும் எல்லாம்                                                                               உனக்கும் பிடிக்கும் என்றாயே…        இப்பொழுது                                           என்னையே பிடிக்கவில்லை என்கிறாயே…                                                            ஏனடா என் அன்பே……….

Tuesday, July 15th, 2008

என்னவனே…..

என்னவனே….. ஒரு யுகமாய் வாழ நினைத்த வாழ்வை.. ஒரு நொடியில் மறக்க சொல்கிறாயே …

Sunday, June 1st, 2008

அன்றும் இன்றும்

அன்று,
          பக்கத்து வீட்டு 
          பையனீடம் என்னடீ
          பல்லை காட்டறா?
          பாகீறவர்கள் தப்பா 
          நினைக்கமாட்டார்கள் 
          அதட்டீனார் அப்பா!
இன்று,
         பல்லை காட்டி
         பையனீடம் சிரிக்க சொல்
         பார்க்க வரவங்கள்
         தப்பா நினைக்கபோறாங்க?
         ஆர்பாட்டம் செய்தார் அப்பா!

Wednesday, May 28th, 2008

என்றும் உன்னுடன்

காதலே பிடிக்காத என் நெஞ்சில்
     உன் உள்ளத்தால் காதலை மலரச் செய்தாய் !
ஒரு ஓலையில் உன் உள்ளத்தை அனுப்பியது
     என் உள்ளத்தை எடுக்கவா !
என் மேல் வைத்திருக்கும் அன்பைச் சொல்லத் தெரியாமல்
     நீ சொன்ன அந்த மூன்று வார்த்தையில்
உன் காதலின் ஆழத்தை புரிய வைத்த
     உன்னுடன் என்றும் இருப்பேன் !
நான் என்றும் உனக்காக !!!!……
 
 
by
kalpanarmsh
kalpanarmsh@gmail.com

Tuesday, May 27th, 2008

வடிவங்கள்

அன்புக்கு வடிவம் அம்மா !
       அறிவுக்கு வடிவம் அப்பா !
பாசத்துக்கு வடிவம் குழந்தை !
      கருணைக்கு வடிவம் கடவுள் !
கற்பனைக்கு வடிவம் நினைவுகள் !
      காதலுக்கு வடிவம் உணர்வுகள் !
அழகுக்கு வடிவம் கண்கள் !
       என் ஆசைக்கு வடிவம் நீ !!!!……
by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com