Archive for the 'சிதறல்கள் ' Category

Saturday, July 26th, 2008

கைக்குட்டை

என்னவனின் மனம் பற்ற,
என்னிசெல்கையில்,
பதற்றத்துடன் நான் பற்றிக்கொண்டது,
உன்னைத்தான், உறுதியாக -         ‘கைக்குட்டை’.  
                                                                                         இப்படிக்கு,                                                                                          லெட்சுமி.                                                                    

Wednesday, May 28th, 2008

என்றும் உன்னுடன்

காதலே பிடிக்காத என் நெஞ்சில்
     உன் உள்ளத்தால் காதலை மலரச் செய்தாய் !
ஒரு ஓலையில் உன் உள்ளத்தை அனுப்பியது
     என் உள்ளத்தை எடுக்கவா !
என் மேல் வைத்திருக்கும் அன்பைச் சொல்லத் தெரியாமல்
     நீ சொன்ன அந்த மூன்று வார்த்தையில்
உன் காதலின் ஆழத்தை புரிய வைத்த
     உன்னுடன் என்றும் இருப்பேன் !
நான் என்றும் உனக்காக !!!!……
 
 
by
kalpanarmsh
kalpanarmsh@gmail.com

Tuesday, May 27th, 2008

வடிவங்கள்

அன்புக்கு வடிவம் அம்மா !
       அறிவுக்கு வடிவம் அப்பா !
பாசத்துக்கு வடிவம் குழந்தை !
      கருணைக்கு வடிவம் கடவுள் !
கற்பனைக்கு வடிவம் நினைவுகள் !
      காதலுக்கு வடிவம் உணர்வுகள் !
அழகுக்கு வடிவம் கண்கள் !
       என் ஆசைக்கு வடிவம் நீ !!!!……
by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com

Monday, May 26th, 2008

Cellphone ஜாலங்கள்

நீ CELL-ஐ பார்த்து சிரிப்பாய் !
    அருகில் இருப்போர் உன்னைப் பார்த்து சிரிப்பார் !
உன் கை விரல் மட்டும் அழுது கொண்டே இருக்கும்
    நீ அதை அழுத்திக்கொண்டே இருப்பதால் !!!……
 
 
by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com

Monday, May 26th, 2008

Cellphone சிணுங்கல்கள்

என் ஜீவனே !
    உன் அழைப்புக்காக காத்திருக்கிறேன் !
நான் உறங்க செல்லும் முன்
    தாலாட்டு கேட்க வேண்டும் !
என்னை தாலாட்டி தூங்க வைக்க
    உன் இசையை எப்பொழுது மீட்டுவாய் !
உனது மணி ஓசை எப்பொழுது கேட்கும் எனக்கு !!!…..
 
 
by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com

Monday, May 26th, 2008

Cellphone

உன் குரல் ஓசை கேட்க
    நான் மணி ஓசை எழுப்பட்டுமா?
 
by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com

Monday, May 26th, 2008

நினைவலைகள்

உன் பொண்ணான நினைவுகள் வீணாகாமல்
       என்றும் இந்த ஏட்டில் நிலைத்திருக்க
இந்த மங்கையின் அன்பு பரிசு இந்த கவிதைகள் !!
 
       உன் நினைவுகளின் போர்வையை போர்த்தி
உன் மடியென்கிற தலையனையில் தலை வைத்து
       உன் நினைவுகளை சுமந்து கொண்டு உறங்க செல்கிறேன்
என் செல்லமாகிய நீ வாங்கி கொடுத்த டெடி பியர் (Teddy bear) பொம்மையுடன் !!
 
       உன் நினைவால் என்னை கவிதை எழுத வைத்தாய் !
 
உன் நினைவுகளின் சுமையிலிருந்து விடுபட
       உன்னை எப்பொழுது எனக்கு காண்பிப்பாய் !!
 
உன்னை நினைக்கும் பொழுது […]

Thursday, May 22nd, 2008

எனது உயிர் நீ

பேச நினைக்கிறேன் வார்த்தைகள் இல்லை !
    பார்க்க துடிக்கிறேன் உன் நிழல் இல்லை !
சுவாசிக்க நினைக்கிறேன் முடியவில்லை ஏனென்றால்
    என் மூச்சு உன்னிடத்தில் !
எனக்கு உயிர் கொடுக்க எப்பொழுது வருவாய் !!!…..
by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com

Thursday, May 22nd, 2008

வெளியூர் பயணம் - ஏங்கும் கண்கள்

என் உயிரே
   என் ஆருயிராகிய நீ
இருக்கும் இடத்தில்
   என் ஜீவன் இருக்கும் !
என் நிழல் மட்டும் உனக்காக
   காத்திருக்கும் உன் வருகைக்காக !!!…..
 
 by
kalpanaramesh
kalpanarmsh@gmail.com

Wednesday, July 4th, 2007

குரல் கேட்காதா ?

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

இன்னும் உறங்கும் நண்பன்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது 

  

                                  தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..

இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன்.